For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவுக்கு நான் திரும்புவதை நிர்வாகிகள் விரும்பவில்லை, அஞ்சுகிறார்கள்.. மு.க.அழகிரி

திமுகவுக்கு நான் வந்தால் வலிமையான தலைவராகிவிடுவேன் என்று நிர்வாகிகள் அச்சப்படுவதாக அழகிரி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதிக்கு அஞ்சலி..மெரினாவில் மு.க.,அழகிரி பரபரப்பு பேட்டி- வீடியோ

    சென்னை: நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகிவிடுவேன் என்று நிர்வாகிகள் அச்சப்படுவதாக அழகிரி தெரிவித்தார்.

    திமுகவில் இருந்த அழகிரி கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கடந்த 2014-ஆம் ஆண்டு அவரை கட்சியிலிருந்து நீக்கினார் கருணாநிதி. இதையடுத்து தேர்தல் சமயத்தில் அவ்வப்போது திமுக குறித்து அழகிரி விமர்சிப்பது வழக்கம்.

    இந்நிலையில் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அதிமுகவை போல் திமுகவிலும் தர்மயுத்தம் தொடங்கிவிட்டது. ஆம் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே தர்மயுத்தம் தலைதூக்க தொடங்கியது.

    திமுகவில் அழகிரி

    திமுகவில் அழகிரி

    இந்நிலையில் அழகிரி திமுகவுக்குள் எப்படியாகினும் வந்துவிட பார்க்கிறார். நாளை திமுக செயற்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் இன்றே கட்சியினருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அழகிரி பேட்டி அளித்துள்ளார்.

    ஆத்மா தண்டிக்கும்

    ஆத்மா தண்டிக்கும்

    இதைத் தொடர்ந்து அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் நான் திமுகவுக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. திமுகவை அழிக்க நினைப்பவர்களை கருணாநிதியின் ஆத்மா தண்டிக்கும்.

    தலைவராகிவிடுவேன்

    தலைவராகிவிடுவேன்

    கட்சியில் முக்கிய பொறுப்புகள் விற்கப்படுகின்றனர். நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகிவிடுவேன் என அச்சப்படுகிறார்கள். செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் செயல்படாமலேயே உள்ளார்.

    ஸ்டாலினை விமர்சனம் செய்த அழகிரி

    ஸ்டாலினை விமர்சனம் செய்த அழகிரி

    ஸ்டாலின் கட்டுப்பாட்டுக்குள் திமுக உள்ளது குறித்து எந்த வித நல்ல மாதிரியான விஷயங்களும் கூறஇயலவில்லை. கட்சியே இல்லை. ஸ்டாலின் சரியாக செயல்பட்டிருந்ததால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்கும் என்றார் அழகிரி.

    English summary
    MK Azhagiri says that DMK Senior activists are afraid of if i am in DMK then i wll become the strong leader.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X