For Quick Alerts
For Daily Alerts
Just In
ஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்பு!
ஆர்.கே நகரில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன், நாம் தமிழர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றோடு முடிவடைந்த நிலையில், 131 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனுக்களின் மீது இன்று காலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடந்தது. இதில் ஒரு வேட்பாளருக்கு இருவர் என்கிற கணக்கில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கல் ஏற்கப்பட்டன. முறையான தகவல்கள் இல்லாததால், சரியாக நிரப்பபடாத படிவங்களாலும் 25 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
Comments
rk nagar bypoll election sim card nomination chennai vishal ttv dinakaran tamilar campaign ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் திமுக நாம்தமிழர் சீமான் வேட்பாளர் விஷால்
English summary
DMK, Naam Tamilar Candidates Nomination in RK Nagar Bypoll accepted after verification says EC .
Story first published: Tuesday, December 5, 2017, 14:00 [IST]