எட்டா கனிக்கு கொட்டாவி விடும் பாஜக... முரசொலி பவள விழாவில் ஸ்டாலின் பொளேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாஜக எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது-ஸ்டாலின்-வீடியோ

சென்னை: அதிமுகவின் பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றலாம் என எட்டா கனிக்கு கொட்டாவி விடுகிறது பாரதிய ஜனதா கட்சி என திமுக செயல் தலைவர் சாடியுள்ளார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:

முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் கடந்த 11-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையால் ஒத்திவைக்கப்பட்டது.

அன்று மழை வராமல் போயிருந்தால் இன்றைக்கு இங்கே அண்ணன் வைகோ வந்திருக்கமாட்டார். வேறு சில தலைவர்களும் வந்திருக்கமாட்டார்கள்.

கையாலாகாத அதிமுக அரசு

கையாலாகாத அதிமுக அரசு

இன்றைக்கு மாணவி அனிதாவை பறிகொடுத்து இருக்கிறோம். கையாலாகாத அ.தி.மு.க அரசு மத்திய அரசுடன் கைகோர்த்து ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது.

சமூக நீதிக்காக

சமூக நீதிக்காக

சமூக நீதியை காக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். கருணாநிதி பிறந்தநாள் கூட்டத்தில் தேசிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தமிழக தலைவர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

ஒன்றுபடுவோம்

ஒன்றுபடுவோம்

அந்தக்குறை இன்றைக்கு தீர்க்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். சமூக நீதியை காக்க வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

எட்டா கனிக்கு கொட்டாவி

எட்டா கனிக்கு கொட்டாவி

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி காலூன்ற பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுகிறது. எட்டா கனிக்கு கொட்டாவி விடுவதுபோல என்பதுதான் பாஜகவின் எண்ணம். மத்திய மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது. எனவே மோடி ஆட்சியை அகற்றுவோம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK working president M.K. Stalin called upon political leaders to bury their differences to fight for social justice.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற