For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டம் போட்டு திராவிட இயக்கத்தால் அடங்கி கிடந்தவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்- ஸ்டாலின் தாக்கு

ஆட்டம் போட்டு திராவிட இயக்கத்தால் அடங்கி கிடந்தவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஈரோடு: ஆட்டம் போட்டு திராவிட இயக்கத்தால் அடங்கி கிடந்தவர்கள் எல்லாம் தற்போது திராவிட இயக்கத்தை அழிக்க புறப்பட்டு இருக்கிறார்கள் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோட்டில் திமுக சார்பில் 2 நாட்களுக்கு மண்டல மாநாடு தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவை திருச்சி சிவா எம்பி தொடங்கிவைத்தார். 2-ஆவது நாளான இன்று திமுக சார்பில் கண்டன தீர்மானங்களை ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்த மாநாட்டில் 50 தீர்மானங்கள் நிறைவேற்றுப்பட்டன.

இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அவர் பேசுகையில், திமுக எனும் பெட்டி கருணாநிதியிடம் இருக்கிறது. கருணாநிதியின் கட்டளைகளை ஏற்று எப்போதும் போல் தொடருவேன்.

கங்கணம்

கங்கணம்

ஒற்றுமையை தென்னகம் மீது வட இந்தியா திணிக்க முயற்சித்தால் அழிவு என்றார் ஆய்வாளர் பணிக்கர். திமுகவை அழித்தே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது.

புறப்பட்டனர்

புறப்பட்டனர்

சூழ்ச்சி, சூதுவலை என்பது அந்த கூட்டத்துக்கு கை வந்த கலை. ஆட்டம் போட்டு திராவிட இயக்கத்தால் அடங்கி கிடந்தவர்கள் புறப்பட்டு இருக்கிறார்கள்.

பாஜக கீழ் மாநிலங்கள்

பாஜக கீழ் மாநிலங்கள்

சமஸ்கிருதம், இந்தி திணிப்பை எதிர்க்க முடியுமா? என ஏகடியம் பேசுகிறார்கள். நாட்டின் பெரும்பகுதி பாஜகவின் கீழாக இருந்தாலும் எதிர்ப்பு சில மாநிலங்களில் இருக்கிறது.

பாஜகவின் பார்வை

பாஜகவின் பார்வை

எதிர்க்கும் மாநிலங்களில் ஊடுருவ அதிகார, பணபலத்தால் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி இறுமாப்புடன் தமிழகத்தை நோக்கி பாஜகவின் பார்வை திரும்பியுள்ளது என்றார் ஸ்டாலின்.

English summary
MK Stalin says that BJP starts its journey to TN to destroy Dravidian movements. Once upon a time they were calmed by us.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X