For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவை அழைத்த ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது- மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு

பாஜகவை அழைத்த ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

    சென்னை: கர்நாடகத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டது. காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சியும் இணைந்து பெரும்பான்மையை காட்டியபோதிலும் ஆளுநர் வஜுபாய் வாலா, 104 இடங்களை பெற்ற பாஜகவையே ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

    MK Stalin condemns Governors hasty invitation to form government

    இந்த அழைப்பின்பேரில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் இந்த செயலை கண்டித்து கர்நாடக சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் போதிய பெரும்பான்மையை உள்ள நிலையிலும் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இது முற்றிலும் தன்னிச்சையான முடிவு மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது ஆகும்.

    இது குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும். அத்துடன் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண செய்துவிடும். ஊழலில் திளைத்துள்ள அதிமுக அரசை பாதுகாக்க பாஜகவின் முயற்சிகள் அனைத்தையும் தமிழக மக்கள் அறிவர். அதுபோல் அவர்களுக்கு சட்டசபையில் போதிய பெரும்பான்மை இல்லை என்றார் ஸ்டாலின்.

    English summary
    MK Stalin tweet that The Karnataka Governor's hasty invitation to the BJP to form Government despite the majority of MLAs forming a post-poll alliance of INC-JD(S)-BSP is arbitrary & unconstitutional. Such a move will only serve to enable horse-trading and destroy our democratic foundations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X