For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேச விரோதிகள் என்று பேசுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்: எச்.ராஜாவுக்கு ஸ்டாலின் கண்டனம்

சோனியா காந்தி பற்றி விமர்சனம் செய்த எச்.ராஜாவுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மற்றவர்களை 'தேச விரோதிகள்' என்றும் 'இந்திய விரோதிகள்' என்றும் பேசுவதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாகரீகமான அரசியலையும், ஆரோக்கியமான விவாதங்களையும் விரும்புகிறோம் என்று கூறி வரும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் எச்.ராஜா போன்றவர்களின் பேச்சுக்களுக்கு எப்படி ஆக்கமும் ஊக்கமும் அளித்து, அவருக்கு ரயில்வே துறையிலும் அரசு பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

 mk stalin condemns h raja over his speech about sonia gandhi

சமூக நீதியின் திருவுருமாக இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வாழும் தந்தை பெரியார் அவர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜா பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜாவின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கொடூரமாக மிரட்டினார். இப்போது தியாகத்தின் உருவமாக திகழும் சோனியா காந்தியை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் "நீ இந்திய விரோதி" என்று ஆவேசமாகவும், ஆணவமாகவும் கை நீட்டிப் பேசுகிறார். "நாம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். மிரட்டும் தொனியில் பேசலாம். நம்மை யார் என்ன செய்ய முடியும்?' என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து எச்.ராஜா விடுபட முடியாமல் தவிப்பது தெரிகிறது.

தமிழக பா.ஜ.க.,விற்குள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினால் அதற்கு அவர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாமே தவிர, இது போன்று பத்திரிக்கையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், தேசம் போற்றும் தலைவர்களையும் அநாகரீகமாக விமர்சிப்பது அவர் வகிக்கும் அரசு பதவிக்கும் அழகல்ல. அவர் சார்ந்திருக்கும் ஒரு தேசிய கட்சிக்கும் ஏற்ற இலக்கணம் அல்ல.

'தேசபக்தி' என்பதும் 'இந்தியன்' என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை 'தேச விரோதிகள்' என்றும் 'இந்திய விரோதிகள்' என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் எச்.ராஜா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர் உணரத் தவறினால் பா.ஜ.க.,வின் தேசிய தலைமை, தந்தை பெரியார், சோனியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் மீது அவதூறான கருத்துக்களைப் பேசும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK working president m.k.stalin condemns bjp H raja over his speech about congress chief sonia gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X