For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் இனி ஒரு நிமிடமும் பதவியில் நீடிக்க கூடாது- ஸ்டாலின் ஆவேசம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: குட்கா முறைகேடு புகார் தொடர்பாக நடைபெறும் சிபிஐ சோதனையால் தமிழகத்திற்கே தலைகுனிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட மொத்தம் 40 பகுதிகளில் சிபிஐ இன்று காலை முதல் போலீசார் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

MK Stalin demands TN Governors intervention and sack Vijaybhaskar

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், குட்கா ஊழல் தொடர்பாக நடைபெறும் ரெய்டு வரவேற்கத்தக்கதுதான். இருப்பினும், அமைச்சர், காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் நடைபெறும் சிபிஐ சோதனையால், தமிழகத்திற்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

குட்கா ஊழல் புரிந்ததற்காக சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் இனி ஒரு நிமிடம் அந்த பதவியில் நீடித்தாலும் அது மக்களாட்சிக்கும் நேர்மை நியாயத்திற்கும் மிகப்பெரிய இழுக்கு..

உடனடியாக இவர்களை பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்படி செய்யாவிட்டால், ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார், மு.க.ஸ்டாலின்.

English summary
MK Stalin demands TN Governor's intervention and sack Vijaybhaskar & TN DGP TK Rajendran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X