For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று முதல் மு.க.ஸ்டாலின் தலைவர்.. திமுகவில் இதுவரை கடந்து வந்த பாதை!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தொண்டராக இருந்து வந்த மு.க.ஸ்டாலின் தனது 65வது வயதில் கட்சியின் தலைவராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மறைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவிக்கு வரும் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கான வேட்புமனுவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று பொதுக்குழுவில் வழங்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்டாலின் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.

 தம்பதி

தம்பதி

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு 2வது மகனாகப் பிறந்தார்.

 திமுக இளைஞர் அமைப்பு

திமுக இளைஞர் அமைப்பு

1967ல் முதல் முறையாக திமுகவில் சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது, திமுகவிற்கு பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திமுக இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திமுக என்ற அமைப்பை உருவாக்கினார்.

 ஸ்டாலின் வாழ்வில் திருப்பம்

ஸ்டாலின் வாழ்வில் திருப்பம்

அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திமுக பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பாக இருந்தது.

 குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பு

பின்னர் 1975-இல் துர்காவை மணந்தார். 1977ல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார்.
1978ல் முதல் திரைப்படத்தை தயாரித்தார் , சில காட்சிகளில் நடித்தார். 1984ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.

 ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றியும் தோல்வியும்

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றியும் தோல்வியும்

1988ல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.

 மீண்டும் திருப்புமுனை

மீண்டும் திருப்புமுனை

1996ல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார். 1996 சென்னையின் 37வது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது.

 அமைச்சரானார்

அமைச்சரானார்

2001ல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார்.

 கொளத்தூர் தொகுதியில் வெற்றி

கொளத்தூர் தொகுதியில் வெற்றி

2008ல் திமுகவில் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009ல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011ல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016ல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

 வேட்புமனு

வேட்புமனு

2016ல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து திமுகவுக்கு தலைவர் பதவிக்கு 28-ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதே நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஸ்டாலினை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர் திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

English summary
MK Stalin going to become President of DMK. Here the news shows the developments of him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X