லண்டன் கிளம்பினார் மு.க.ஸ்டாலின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் கிளம்பினார்.

சட்டசபைக் கூட்டத் தொடர் மற்றும் முரசொலியின் பவளவிழா பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் வெளிநாடு செல்ல திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

MK Stalin leaves for London

ஆனால் நேற்று நடைபெறுவதாக இருந்த முரசொலி பவள விழா பொதுக் கூட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே ஸ்டாலின் இன்றைய பயணம் கேள்விக்குறியாக இருந்த நிலையில் முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்தை அவர் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி மு.க.ஸ்டாலின் இன்று இரவு 9.45 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் புறப்பட்டார். அங்கிருந்து லண்டன் செல்கிறார். ஒரு வார காலம் வெளி நாட்டில் இருந்து விட்டு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமெனில் தற்போதைய ஆட்சியை அகற்றப்பட வேண்டும் என கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Stalin said that the present AIADMK gvt regime should be removed if the Tamil Nadu people having a dawning time.
Please Wait while comments are loading...