For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடாது கருப்பாய் தொடரும் தடை.. ஸ்டாலின் மீது கனிமொழி கடுகடு

ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள தமக்கு தொடரும் தடையால் ஸ்டாலின் தரப்பு மீது கனிமொழி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஸ்டாலின் தரப்பு விதித்த தடை நீடிப்பதால் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திமுகவின் செயல் தலைவரான பின்னர் கட்சி தொண்டர்களிடத்தில் நெருக்கமாக இருப்பதற்கான சில நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் தமது குடும்ப உறுப்பினர்கள் யாருமே ஆதிக்கம் செலுத்திவிடாமல் 'கண்ணும் கருத்துமாக' இருந்து வருகிறது ஸ்டாலின் தரப்பு.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் 43,000 நாடார் சமூக வாக்குகள் உள்ளன. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியை களமிறக்கினால் எளிதாகவே நாடார் சமூக வாக்குகளை அள்ள முடியும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு.

நாடார் சமூக தலைவர்கள்

நாடார் சமூக தலைவர்கள்

ஆனால் செயல் தலைவரான பிறகு தமக்கு வைக்கப்பட்டுள்ள அக்னி பரீட்சையில் தாமே முயற்சித்து வென்றாக வேண்டும் என்பதில் ஸ்டாலின் தரப்பு மும்முரமாக உள்ளது. இதனால் தென்மாவட்ட நாடார் சமூகத் தலைவர்களையெல்லாம் அணுகியிருக்கிறது ஸ்டாலின் தரப்பு.

கனிமொழிக்கு முட்டுக்கட்டை

கனிமொழிக்கு முட்டுக்கட்டை

இருந்தபோது தமது குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழியை களமிறக்கி பிரசாரம் செய்து அதன் மூலம் வெற்றி பெற்றோம் என்ற நிலைமை வந்துவிடக் கூடாது என்பதுதான் ஸ்டாலின் தரப்பின் நோக்கமாக இருக்கிறது. இதனால் இதுவரை கனிமொழியின் பிரசாரத்துக்கு க்ரீன் சிக்னல் கொடுக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிறதாம் ஸ்டாலின் தரப்பு.

ஏற்கனவே அதிருப்தி

ஏற்கனவே அதிருப்தி

டெல்லி அரசியலுக்காக கருணாநிதியால் அனுப்பி வைக்கப்பட்டவர் கனிமொழி. ஆனால் ஸ்டாலின் தரப்போ. டெல்லி அரசியல் பணிகளை கனிமொழியிடம் ஒப்படைப்பதில்லையாம். மருமகன் சபரீசன், திருச்சி சிவா மூலமாகவே டெல்லி அரசியல் பணிகளை மேற்கொள்வதில் ஏற்கனவே கனிமொழி தரப்பு அதிருப்தியாம்.

தொடரும் தடை

தொடரும் தடை

தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் கனிமொழிக்கு இன்னமும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் திமுக தொண்டர்களிடையே நாள்தோறும் பேசுபொருளாக இருந்து வருகிறது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத ஸ்டாலின் தரப்பு, கூடுமானவரை கனிமொழியை ஓரம்கட்டி வைப்பதில் உறுதியாகவே உள்ளதாம். இதில் தொடர்ந்து கனிமொழி தரப்பு அதிருப்தியாகவே இருந்து வருகிறதாம்.

English summary
DMK Sources said that their Working President MK Stalin still not allow to Rajya Sabha MP Kanimozhi to Campaign in RK Nagar By election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X