For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"விலகுகிறேன்".. பரபரப்பேற்படுத்திய ஸ்டாலின்.. தலைவர்கள் கோரிக்கையால் முடிவு வாபஸ்!

|

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாக திமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என்று மு.க.அழகிரி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது.

நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 35ல் திமுக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற இயலவில்லை.

இதனால், இத்தோல்விக்கு முழுப் பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா கடிதத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் அளித்ததாகவும், ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள கருணாநிதி மறுத்ததாகவும் செய்திகள் தெரிவித்தன. ஆனால், இது தொடர்பாக திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இதற்கிடையே சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, இத்தேர்தலில் திமுக தோல்விக்குக் காரணமானவர்கள் விலக வேண்டும் என கோரியிருந்த நிலையில் ஸ்டாலின் விலகல் குறித்த வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கூட்டியது. இதனால், மீண்டும் கட்சிக்குள் அழகிரி அழைக்கப்படுவாரா என்ற கருத்தும் நிலவியது.

இதனால் ஸ்டாலின் வீட்டு வாசலில் செய்தியாளர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால், கட்சித் தலைமை ஏற்றுக் கொள்ளாததால் ஸ்டாலினின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதாக கட்சி துணைப் பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

என்ன பொறுப்பில் இருக்கிறார் ஸ்டாலின்?

திமுக இளைஞர் அணி ஸ்டாலின் வசம்தான் நீண்ட காலமாக இருந்து வருகிறது. கட்சியின் பொருளாளராகவும் அவர் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார். இந்த இரு பொறுப்புகளையும் ராஜினாமா செய்வதாகத்தான் தனது கடிதத்தில் கூறியிருந்தாராம் ஸ்டாலின்.

இந்தத் தேர்தலில் ஸ்டாலின் பொறுப்பு என்று பார்த்தால் கூட்டணி குறித்த திட்டமிடல், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பிரசார உத்திகள், பிரசாரம் என அனைத்திலுமே ஸ்டாலின்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக தலைவரின் அறிவுறுத்தலையும், கட்சித் தொண்டர்களின் கோரிக்கையையும் தொடர்ந்து ராஜினாமா முடிவை கட்சித் தலைமையிடம் வலியுறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் தீர்மானித்துள்ளதாக துரை முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
The DMK treasurer M.K.Stalin, who decided to quit from the party post, has changed his mind because of his father's advice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X