For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழை புகழ்வது இருக்கட்டும், இந்த அறிவிப்புகளை மோடி வெளியிடுவாரா?- ஸ்டாலின் கிடுக்கிப்பிடி

சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழி சிறந்தது என்ற பிரதமரின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழியே சிறந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதை வரவேற்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஆலோசனை என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் கூறுகையில், தமிழ் மிகவும் தொன்மையான மொழி. அது சம்ஸ்கிருதத்தை காட்டிலும் மிகவும் பழமையானது.

MK Stalin tweets that he welcomes PM's comment over tamil language

தமிழ் அழகான மொழி. அப்படிப்பட்ட மொழியை என்னால் பேச முடியாதது குறித்து வருத்தமளிக்கிறது. வணக்கம் என்று சொல்ல மட்டும் எனக்கு தெரியும். அதற்கு மேல் ஒன்றும் தெரியாது. இது வருந்தத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை தமிழகத்தில் உள்ளவர்கள் வரவேற்றனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் "சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் நரேந்திரமோடியின் கருத்தை வரவேற்கிறேன்.

தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
DMK Working President MK Stalin welcomes PM's comment over Tamil Language and also he urges to declare Tamil as Official Language. Thirukkural should also be declared as National book, he adds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X