For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம்: 3,4வது அணு உலைகள் தொடர்பான அச்சத்தைப் போக்கிடுக!

By Mathi
Google Oneindia Tamil News

இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணு உலை தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளது.

குறிப்பாக

1) இரண்டாவது அலகு அடிக்கடியும், திடீரெனவும் மூடப்பட்டதின் பின் உள்ளசந்தேகங்களை போக்குதல்,

2) உறுதியளித்தப்படி மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை வழங்குதல்,

3) ஜனநாயக்முறையில் நடைபெற்ற போராட்டங்களுக்குஎதிராக போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுதல்,

MK Stalin urges to shift out Kudankulam two nuclear plants

4) கூடங்குளம் அணு உலைகளில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை முழுவதுமாகதமிழகத்துக்கு வழங்குதல்,

5) மூன்றாவது மற்றும்நான்காவது அலகுகளை நிர்மாணிக்கும் முன் உச்சநீதிமன்றத்தின் கட்டளைகளின் படி நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான கமிட்டி மூலம் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்தல்

போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில்வசிக்கும் அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால், இனி வரவிருக்கும்திட்டங்களை வேறு இடங்களுக்கு மாற்றவேண்டும் என்ற தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் எழுப்பும் குரலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவேண்டியது மத்திய அரசுக்கு அவசியமாகிறது.

எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் நிர்மாணிக்கப்படவிருக்கும் மூன்று மற்றும் நான்காவது அலகு சம்பந்தப்பட்ட இந்தவிவகாரங்களில் கவனம் செலுத்தி, தமிழகமக்களுக்கு எந்த வகையிலும் அச்சம் ஏற்படாத வகையில், தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மத்திய அரசு தெளிவு படுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.'

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
DMK Working President M.K. Stalin has urged the Central government to examine the safety of Kudankulam nuclear plants and also shift the upcoming units from the TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X