For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏவுக்கு அப்பா வயசு.. எப்படி மணப்பேன்.. மீட்கப்பட்ட மணப்பெண் கண்ணீர்

மாயமான மணப்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.எல்.ஏ.வை மணக்க இருந்த பெண் கண்ணீர் பேட்டி- வீடியோ

    கோபி: பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ மணக்கவிருந்து, பின்பு திடீரென மாயமான இளம்பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

    பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஈஸ்வரன். இவருக்கு வயது 43. இவருக்கும் சத்தியமங்கலத்தை சேர்ந்த சந்தியா என்ற 23 வயது பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    முதலமைச்சர் பழனிசாமி

    முதலமைச்சர் பழனிசாமி

    வரும் 12ம் தேதி பண்ணாரி அம்மன் கோயிலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இதற்கான பத்திரிகையும் ஊர் முழுக்க கொடுக்கப்பட்டு வந்தது.

    43 வயதில் திருமணம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.. பெரும் சோகத்தில் அதிமுக எம்எல்ஏ!43 வயதில் திருமணம்.. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்.. பெரும் சோகத்தில் அதிமுக எம்எல்ஏ!

    வேறு பெண் முடிவு

    வேறு பெண் முடிவு

    ஆனால் கடந்த 1ம் தேதி சந்தியா வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். எம்எல்ஏ மணக்கவிருந்த பெண் மாயமானது பவானிசாகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு அவரது சமூகத்திலேயே வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயித்துவிட்டதாகவும், குறித்த முகூர்த்தத்திலேயே திருமணம் என்றும் நேற்று உறுதி கூறப்பட்டது.

    [Read This: நிச்சயித்த பெண் மாயம்...அதிமுக எம்எல்ஏக்கு இன்னொரு பெண் கிடைத்து விட்டார்-வீடியோ]

    அப்பா வயது உள்ளவர்

    அப்பா வயது உள்ளவர்

    இந்நிலையில், திருச்சியில் சத்யா என்பவரின் வீட்டில் மாயமான சந்தியாவை போலீசார் மீட்டனர், பின்னர் அவரை கோபி ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது வீட்டை விட்டு போக வேண்டிய காரணம் என்ன என்று நீதிபதி விசாரித்தார். அதற்கு சந்தியா, "இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கவில்லை. மாப்பிள்ளைக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் அதிகமாக இருக்கு. எனக்கும் எம்.எல்.ஏ., ஈஸ்வரனுக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது. என் தந்தை வயது உள்ளவரை நான் எப்படி திருமணம் செய்வேன்? அதனால் வேறு வழியில்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினேன். இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று வீட்டில் சொன்னேன். ஆனாலும் கட்டாயப்படுத்திதான் ஏற்பாடுகள் செய்தார்கள்" என்றார்.

    [Read This: மணப்பெண்ணால் கைவிடப்பட்ட ஈரோடு அதிமுக எம்எல்ஏ ஹேப்பி அண்ணாச்சி.. அடுத்த பெண் கிடைத்தார்!]

    துன்புறுத்தக்கூடாது

    துன்புறுத்தக்கூடாது

    இதன்பின்னர் சந்தியாவின் பெற்றோரை அழைத்து, அவர்களிடம் சந்தியா கூறிய விபரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பெற்றோர் மகளை தங்களுடனே கூட்டி செல்கிறோம் என்றனர். அதற்கு நீதிபதி, "அப்படியானால், சந்தியாவை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தக்கூடாது, அவரை அடித்து துன்புறுத்துவதோ கூடாது. அதேபோல உறவினர்கள் அவரை விசாரணை செய்வதோ கூடாது" என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்தபிறகுதான் சந்தியா பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

    English summary
    MLA Eswaran bride Sathya rescued at Trichy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X