For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மானாமதுரை எம்.எல்.ஏ., தாக்குதல் வழக்கு: மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளைத்துரை விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மானாமதுரை: மானாமதுரை அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குணசேகரன் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி.,வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றுமுதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

கடந்த 6 ஆம் தேதி இரவு 7 மணியளவில் மானாமதுரை அண்ணாசிலை அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ., குணசேகரன் மாருதி தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர் சோமன் என்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டார்.

மதுரையில் சிகிச்சை

பலத்த காயமுற்ற குணசேகரன், சோமன், அவரது தம்பி ஆறுமுகம் ஆகியோர் மதுரையில் மருத்துவ சிகிச்சை பெற்றனர். எம்.எல்ஏ குணசேகரன் மதுரை தனியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 22.06.2014 அன்று வீடு திரும்பினார்.

6 பேர் கைது

குணசேகரன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் லோகேஸ்வரன், பாலமுருகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகமுகவினர் பாதிப்பு

மானாமதுரையில் பத்திர அலுவலகத்திற்கு எதிராக வைகை ஆற்றங்கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பால் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் வீடும் இடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அதிமுகவினர் எம்.எல்.ஏ.விடம் நியாயம் கேட்டனர். இதுவே குணசேகரன் மீதான தாக்குலுக்கு காரணம் என்றும் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

MLA gunasekaran attack: ADSP Velladurai inqury

ஆக்கிரமிப்பு அகற்றம்

எம்.எல்.ஏ மீதான தாக்குதலுக்குக் காரணம் அண்ணாசிலை அருகே நடந்த ஆக்கிரமிப்பு அகற்றலே காரனம் என்று முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைத்துரை நியமனம்

இதனிடையே இவ்வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக ராமநாதபுரம் மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி.,வெள்ளைத்துரை நியமிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை தொடக்கம்

நேற்று காலை எம்.எல்.ஏ.,வை வெட்டிய இடத்தில் விசாரணை மேற் கொண்டார்.சம்பவத்தில் காயமடைந்த சோமனிடமும் விசாரணை செய்தார். அன்றைய தினம் மின்சாரம் தடை செய்யப்பட்டது ஏன் என்று மின்வாரிய அலுவலகத்தில் விசாரணை செய்தார்.

குற்றவாளி யார்

இவ்வழக்கு குறித்து கேட்டபோது, விசாரணையை தற்போது தான் ஆரம்பித்துள்ளதாகவும், இரு நாட்களில் முழு விபரமும் தெரிய வரும் என்றார்.

English summary
Ramanathapuram ADSP Velladurai to investigater for the case of attack on Manamadurai AIADMK MLA M.Gunasekaran at Manamadurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X