For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11 பெரிதா? 18 பெரிதா? தலைமை நீதிபதியிடம் மல்லுக்கட்டிய தேவராஜன்.. ஹைகோர்ட்டில் பரபரப்பு

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்-விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்

    சென்னை: எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் வழக்கில் பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் தலைமை நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு பிறப்பிக்க உள்ளது.

    இதனால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர் தகுதி நீக்கத்தால் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

    தேவராஜன் வாக்குவாதம்

    தேவராஜன் வாக்குவாதம்

    இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மனுதாரர் தேவராஜன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    உயர்நீதிமன்றம் மறுப்பு

    உயர்நீதிமன்றம் மறுப்பு

    ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கக்கூடாது என அவர் முறையீடு செய்தார். தேவராஜன் முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது.

    11 பெரிதா? 18 பெரிதா?

    11 பெரிதா? 18 பெரிதா?

    18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் வரை ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு தரக்கூடாது என தேவராஜன் முறையீடு செய்தார். அப்போது 11 பெரிதா? 18 பெரிதா? என்று தலைமை நீதிபதியிடம் கேள்வி எழுப்பிய அவர், முதல் 18 எம்எல்ஏக்கள் வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    எங்களுக்கு தெரியும்

    எங்களுக்கு தெரியும்

    தேவராஜனின் இந்த நடவடிக்கைக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். எம்எல்ஏக்கள் வழக்கில் எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் என்றார்.

    தீவிரவாதியில்லை

    தீவிரவாதியில்லை

    ஆனாலும் தொடர்ந்து வாக்குவாதம் செய்த தேவராஜன், தான் ஒன்றும் தீவிரவாதியில்லை என்றும் வாக்காளர் என்ற முறையில் முறையிட்டதாகவும் கூறினார்.

    வெளியேற்ற உத்தரவு

    வெளியேற்ற உத்தரவு

    இதனால் ஆத்திரமடைந்த தலைமை நீதிபதி சிஎஸ்எப்ஐ வீரர்களை அழைத்து தேவராஜனை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    In the case of MLAs disqualified, Devarajan from Perambur was argued with the Chief Justice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X