For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு : தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி விழாவில் தேசிய கீதத்துக்கு பதில் சமஸ்கிருத பாடல்- வீடியோ

    சென்னை : சென்னை ஐ.ஐ.டி.,யில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டத்தற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.

    அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற ஒரு விழாவில், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்ட நிலையில், அங்கு வழக்கமாக பாடப்படும் தேசிய கீதமும்,தமிழ்தாய் வாழ்த்தும் புறக்கணிக்கப்பட்டு, சமஸ்கிருதத்தில் ஒரு பாடல் பாடப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

    MLAs join statement on Chennai IIT Issue

    ஒரு பக்கம் 'வணக்கம்' என்று ஒரு வார்த்தையை பேசி, தமிழை புகழ்வதுப்போல நடிப்பதும், மறுபுறம் ஹிந்தி - சமஸ்கிருத மொழி திணிப்புகளை தந்திரமாக செய்வதும் காவி ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட சூழ்ச்சியாகும்.

    இந்தியாவையே அதிர வைத்த மொழியுணர்வு போராட்டத்தின் தாயகம் தமிழ்நாடு என்பதை 'வடக்கில்' இருப்பவர்களுக்கு மீண்டும் உணர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறோம்.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எழுந்த இனமான கிளர்ச்சியின் உணர்வுகள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர வேண்டும், மொழி உணர்வோடு மோத வேண்டாம் என்பதையும் திட்டவட்டமாக தெரிவிப்பதாகவும், இதுபோன்ற தமிழர் விரோதப் போக்குகளை இனிமேலும் அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

    English summary
    MLAs joined statement on Chennai IIT Issue. Earlier in a function Sanskrit devotional song was played in IIT instead of Tamilthai Vazhthu and it made comments from party leaders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X