For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது நல்ல முடிவு.. கலாச்சாரங்கள் மாறும்... சபரிமலை குறித்து கமல் கருத்து

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி- சுப்ரீம்கோர்ட்- வீடியோ

    சென்னை : சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு என்று கமலஹாசன் கூறியுள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை, கடவுளை வழிபடுவதில் ஆண் பெண் என் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் பெண்கள் கோவிலுக்குள் செல்ல தடைவிதிப்பது சட்ட விரோதம் என்றும் அதிரடியாக உச்சநீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

     MNM Kamal welcomes Sabarimala Verdict

    [சபரிமலை.. 4 ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு பச்சைக்கொடி.. பெண் நீதிபதி எதிர்ப்பு!]

    இந்த தீர்ப்பினை மதுரை ஆதீனம், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதேபோல உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமலஹாசனும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு என்றார். கடவுள் அனைவருக்கும் சமமானவர் என்றும், போக வேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம் என்றும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும் என்றும் கமல் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    MNM Kamal welcomes Sabarimala Verdict
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X