For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனியில் 'கர்னல் ஜான் பென்னிகுவிக்' பேருந்து நிலையம்- முதல்வர் திறந்து வைத்தார்!

Google Oneindia Tamil News

Modern bus stand for Theni
தேனி: தேனியில் கட்டப்பட்ட கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரிலான புதிய பேருந்து நிலையத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கேரளாவில் உள்ள தேக்கடி, மூணாறு உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு செல்வோர் தேனி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதேபோல், கேரளாவில் இருந்து மதுரை, திண்டுக்கல்,பழநி செல்வோரும், இவ்வழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதனால், தேனி நகரம் வாகன நெரிசலில் சிக்கி தவித்து வந்தது. அதேபோல் பழைய பேருந்து நிலையமும் 14 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் வகையில் சிறியதாகவும் இருந்தது. இதையடுத்து, தேனி-பெரியகுளம் பை பாஸ் சாலை அருகே வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் 7.35 ஏக்கரில், ரூ15.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்தப் பேருந்து நிலையத்தை நேற்று வீடியோ கான்பரன்சிங் முறையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

English summary
A modern bus stand that will serve outstation buses was inaugurated here by Chief Minister Jayalalithaa through video conferencing on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X