For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை.. வைகோ ஆவேசம்

மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலைக்கு இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி அருகதை அற்றவர்... வைகோ ஆவேசம்

    மதுரை: அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு அவுட் போஸ்ட் அம்பேத்கர் சிலைக்கு இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் மோடி அரசுக்கு அம்பேத்கரை பற்றி பேச அருகதை இல்லை என ஆவேசமாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ உலகத்தின் தலை சிறந்த அரசியல் சட்டங்களை எல்லாம் ஆய்வு செய்து, இந்திய அரசியல் சட்டத்தை இயற்றினார் அம்பேத்கர். மனு தர்ம சாஸ்திரம் ஒழிய வேண்டும் என அருமையான புத்தகம் எழுதினார்.

    modi govt not deserv to talk about ambedkar vaiko

    அம்பேத்கருக்கு நிகரான சட்ட மேதை யாரும் கிடையாது

    இந்து மதம் மிகவும் கொடுமையானது என முடிவு செய்து, நாகபுரியில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவினார்.

    தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அவர்களுக்காகப் போராடினார்.

    அம்பேத்கர் படத்தை மைய மண்டபத்தில் எனது கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தில் வி.பி.சிங் திறந்து வைத்தார். டாக்டர் அம்பேத்கர் பெரியாரை நேசித்தார். பெரியார் டாக்டர் அம்பேத்கரை நேசித்தார்.

    இன்று ஒரு மதம், ஒரு மொழி என இந்துத்துவா கொள்கையைத் திணிக்க முயற்சிக்கும் மோடி அரசுக்கு டாக்டர் அம்பேத்கரைப் பற்றிப் பேச அருகதை கிடையாது.அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் சாதி சாயம் பூச மத்திய மோடி அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

    English summary
    MDMK general secretary Vaiko paid homage to Ambedkar statue for the Ambedkar Jayanthi. Vaiko has said that Modi govt not deserve to talk about Ambedkar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X