For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூய்மை இந்தியா திட்டம் வரும் முன்பு, திறந்த வெளியில் மலம் கழித்தோம்.. மோடியிடம் நெகிழ்ந்த சேலம் பெண்

Google Oneindia Tamil News

சேலம்: தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மற்றொரு திட்டத்தை மோடி தொடங்கி வைத்ததை அடுத்து அவருடன் சேலம் பெண் ஒருவர் உரையாடினார்.

தூய்மையான பாரதத்தை உருவாக்குவோம் என்ற முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளன்று அக்டோபர் 2-ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு தூய்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆண்டு காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. அதேபோல் தூய்மை இந்தியா திட்டமும் 4-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.

தூய்மை பணி

தூய்மை பணி

இதையடுத்து புதிய திட்டமான தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். இதன்படி டெல்லியில் பஹார்கஞ்சில் உள்ள பாபா சாஹீப் அம்பேத்கர் உயர்நிலை பள்ளியில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

மோடியிடம் பேச்சு

மோடியிடம் பேச்சு

பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து நமோ ஆப் மூலம் பொதுமக்கள், மாணவர்களுடன் மோடி உரையாடினார். இதற்காக நாடு முழுவதும் 18 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த சுமதி என்பவர் மோடியிடம் பேசினார்.

தூய்மையின் அவசியம்

அவர் பேசுகையில் நான் 10 ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுவில் பணியாற்றி வருகிறேன். தூய்மை இந்தியா திட்டம் வருவதற்கு முன்னர் எங்கள் கிராமத்து பெண்கள் வெட்ட வெளியில் மலம் கழித்தனர். இதையடுத்து தூய்மையின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைத்தோம்.

ஏரியில் மரங்கள்

தூய்மையே சேவை திட்டத்தை முன்னிட்டு சேலத்தில் பெரும்பாலான இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளோம். ஏரியில் 1000 மரக்கன்றுகளை நடுகிறோம். சேலத்தை இந்தியாவில் தலைசிறந்த மாவட்டமாக மாற்றி காட்டுவோம் என்றார் அந்த பெண்.

English summary
Prime Minister Narendra Modi Saturday launched ‘Swachhata Hi Seva Movement’, saying the movement aims at fulfilling Bapu’s dream of a Clean India. As a part of it he also interacts with Salem lady.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X