For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 ஆண்டுக்குப் பிறகு திருச்சிக்கு வந்த மோடி

Google Oneindia Tamil News

திருச்சி: கிட்டத்தட்ட வனவாசம் போல இருக்கிறது நரேந்திர மோடியின் திருச்சி விஜயம். ஆம்.. அவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சிக்கு மீ்ண்டும் வந்தார்.

பிரதமர் வேட்பாளரான பின்னர் முதல் முறையாக தமிழகத்திற்கு வந்த மோடிக்கு, திருச்சி பயணம் கடந்த 14 ஆண்டுகளில் 2வது முறையாகும்.

மோடியின் திருச்சி கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கும், திருச்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்த ஒரு பிளாஷ்பேக்....

1999ம் ஆண்டு...

1999ம் ஆண்டு...

கடைசியாக திருச்சிக்கு 1999ம் ஆண்டுதான் நரேந்திர மோடி வந்திருந்தார்.

பாஜகவின் 4வது மாநில மாநாடு

பாஜகவின் 4வது மாநில மாநாடு

அப்போது திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த பாஜகவின் 4வது மாநில மாநாட்டில் மோடி பங்கேற்றார்.

அப்போது தே.பொ.செ.

அப்போது தே.பொ.செ.

அப்போது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார் மோடி. வாஜ்பாய், அத்வானி, பிரமோத் மகாஜன் ஆகியோரோடு அந்த மாநாட்டில் கலந்து கொண்டார் மோடி.

14 ஆண்டுகளுக்குப் பிறகு

14 ஆண்டுகளுக்குப் பிறகு

அதன் பின்னர் திருச்சிக்கு மோடி வந்ததில்லை. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்தார் - இந்த முறை பிரதமர் வேட்பாளராக.

கேரளாவிலிருந்து

கேரளாவிலிருந்து

கேரளாவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி அங்கிருந்து திருச்சிக்கு வருகை தந்தார்.

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஜாகை

எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஜாகை

அதன் பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள எஸ்.ஆர்.எம். ஹோட்டலுக்குச் சென்ற மோடி அங்கு ஓய்வெடுத்த பின்னர் மாநாட்டுத் திடலுக்குச் சென்றார்.

ரஜினி வரவில்லை

ரஜினி வரவில்லை

மோடியை திருச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ரஜினி வரவில்லை.

English summary
BJP's PM candidate Narendra Modi is visiting Trichy nearly after 14 years. He visited the rock fort town on 1999 during the party's 4th state level conference, which was attended by Vajpayee, Advani and late Pramod Mahajan. Modi was the national general secretary then.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X