For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுழற்றியடித்த மோடி சுனாமி… பல மாநிலங்களில் காணாமல் போன காங்கிரஸ்…

By Mayura Akilan
|

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக வீசிய சுனாமியில் சிக்கி பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வாஷ் அவுட் ஆகியுள்ளது.

பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட போது நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று பேச ஆரம்பித்த பாஜகவினர், தேர்தல் நெருங்க நெருங்க மோடியை சுனாமி என்று வர்ணித்தனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியரும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினரும் மோடி அலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று கூறிவந்தனர். அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் வெளியாகி, பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை மூழ்கடித்துள்ளது மோடி சுனாமி.

Modi wave storms Delhi

அஸ்ஸாம் தொடங்கி

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் 10 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதலாக ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஆறுதல் வெற்றி

அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. அதே சமயம் அருணாசல பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

சீமாந்திராவில் முட்டை

அதேசமயம் சீமாந்திராவில் 25 தொகுதிகளில் ஒரு இடம் கூட காங்கிரஸ் கட்சிக்கு முன்னிலை கிடைக்கவில்லை. ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், பாஜக கூட்டணியோடு போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கைப்பற்றியுள்ளது.

பீகாரில் சுருட்டிய பாஜக

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 32 இடங்கள் முன்னிலை கிடைத்துள்ளது. அதேசமயம் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு 5 இடமும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 இடங்களும் மட்டுமே முன்னிலை கிடைத்துள்ளது.

காணாமல் போனதே...

அந்தமான் நிக்கோபார் தீவுகளைப் போல தமன் & தியூ, சண்டிகர், டெல்லி, மற்றும் தாத்ரா & நகர் ஹவேலியிலும் பாஜகவிற்கே வெற்றி கிட்டியது. காங்கிரஸ் காணமல் போனது.

மூழ்கிய காங்கிரஸ்

அதேபோல குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஒடிஷா,நாகலாந்து, தமிழ்நாடு, உத்தரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட முன்னிலை கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்.

கொஞ்சம் பரவாயில்லை ரகம்

ஹரியானாவில் 1 இடமும், ஜார்கண்ட் மாநிலத்தில் 2, கர்நாடகாவில் 9, கேரளாவில் 12, மத்திய பிரதேசத்தில் 2, மகாராஷ்டிராவில் 5, பஞ்சாப் மாநிலத்தில் 3 என ஆறுதல் பட்டுக்கொள்ளும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு முன்னணி கிடைத்துள்ளது.,

பாஜகவின் வெற்றிமுகம்

அதேசமயம், மோடி சுனாமி காரணமாக பாஜகவிற்கு ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம்,ஜார்கண்ட்,கர்நாடகாவில் அதிக அளவிலான இடங்கள் முன்னிலை கிடைத்துள்ளன.

மகாராஷ்டிராவில் அதிரடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 48 இடங்களில் 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது பாஜக. அதேபோல மத்திய பிரதேசத்தில் 29 இடங்களில் 27 இடங்களை கைப்பற்றும் சூழ்நிலை நிலவுகிறது.

ராஜஸ்தான் ராஜா பாஜக

ராஜஸ்தான் மாநிலத்தில் 25 இடங்களிலும் பாஜகதான் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 2 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 2 இடங்களிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

சுழற்றியடித்த மோடி சுனாமி

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 இடங்களில் 72 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும்,காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி மோடி சுனாமியில் மொத்தமாக மூழ்கிப் போய்விட்டது என்றே கூறப்படுகிறது.

பல மாநிலங்களில்...

மொத்தத்தில் இந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிஷா, கேரளா என ஒரு சில மாநிலங்கள் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வீறு கொண்டு வீசிய மோடி சுனாமி காங்கிரஸ் கட்சியை எழ முடியாத அளவிற்கு மூழ்கடித்துவிட்டது என்றே கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

English summary
It is just three hours after the counting began on Friday and there is little scope left for any doubt. The man of the moment is towering over others and fast emerging as the destiny of the nation. It's not a Modi wave, as talked about, it is a TsuNaMo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X