• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மங்கள்யான் திட்ட இயக்குநர் நெல்லை சுப்பையா அருணன்... ஒரு கிராமத்து விஞ்ஞானி

By Mayura Akilan
|

திருநெல்வேலி: இந்திய அறிவியலில் மிகப்பெரிய சாதனை இன்றைய தினம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பூமியில் இருந்து புறப்பட்ட மங்கள்யான் செவ்வாயை அடைந்த தினம் இன்று.

இன்றைக்கு உலகமே இந்தியாவின் சாதனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் மங்கள்யான். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் 'மங்கள்யான்' திட்டத்தின் தூணாக இருந்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் திட்ட இயக்குநர் சுப்பையா அருணன்! இவர் ஒரு தமிழர் அதுவும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து விஞ்ஞானி.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ்... ஆகிய நாடுகள் மட்டுமே செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பி வெற்றி பெற்றுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்ய அருணன் வகுத்த வியூகம் அளப்பறியது,

செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான் நிலைநிறுத்தப்பட்ட உடன் சக விஞ்ஞானிகள் அவருடன் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.

மார்ஸ் மிஷன்

மார்ஸ் மிஷன்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட "மங்கள்யான்' செயற்கைகோள் இன்று வெற்றிகரமாக செவ்வாய் கோளை அடைந்துள்ளது. மிகுந்த சிக்கலான, பல நாடுகளில் பல்வேறு கட்டங்களில் பின்னடைவைச் சந்தித்த 'மார்ஸ் மிஷன்' திட்டத்தை மிகக் குறைந்த செலவில், வெற்றிகரமாக நிறைவேற்றியவர் அருணன்

திருநெல்வேலி விஞ்ஞானி

திருநெல்வேலி விஞ்ஞானி

இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் சுப்பையா அருணன்,55. இவர், நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர். செவ்வாய்க் கிரகத்தை ஆராய, விண்ணில் ஏவப்பட்டுள்ள "மங்கள்யான்' செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக நெல்லையை சேர்ந்த விஞ்ஞானி சுப்பையா அருணன் பணியாற்றியுள்ளது, சொந்த ஊர் மக்களுக்கு பெருமையாக உள்ளது.

தலைமை ஆசிரியர் மகன்

தலைமை ஆசிரியர் மகன்

இவரது தந்தை சுப்பையா, ஏர்வாடி, வள்ளியூர், கூடங்குளம் பள்ளிகளில் தலைமையாசிரியராக பணியாற்றியுள்ளார். இவரது தாயார் மாணிக்கம் அம்மாள்.

பாளை டூ பெங்களூர்

பாளை டூ பெங்களூர்

அருணன், திருக்குறுங்குடி பள்ளியிலும், பாளையங்கோட்டை சேவியர் பள்ளியில் பயின்றுள்ளார். பின்னர், கோவை கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங் பட்டம் பெற்றார். 1984 ல் திருவனந்தபுரம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணியை துவக்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் பணிபுரிகிறார்.

நம்பி நாராயணன் மருமகன்

நம்பி நாராயணன் மருமகன்

திருவனந்தபுரம் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன்,80, என்பவரது மூத்த சகோதரியின் மகன் தான் அருணன். 1994 ல், விண்வெளி ரகசியங்களை மாலத்தீவு பெண்களுக்கு கொடுத்ததாக, நம்பி நாராயணன் கைதானார். பின்னர், அந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டு, அதற்காக, நம்பி நாராயணனிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர்.

மாப்பிள்ளையான அருணன்

மாப்பிள்ளையான அருணன்

நம்பி நாராயணனின் மகள் கீதாவை தான், சுப்பையா அருணன் திருமணம் செய்துள்ளார். இவர்கள், தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கின்றனர். கீதா பள்ளி ஆசிரியையாக உள்ளார். அருணனின் அண்ணன் நல்லமுத்து வனவிலங்கு புகைப்பட கலைஞராகவும், தம்பி குமரன் சென்னையில் சினிமா இசை அமைப்பாளராகவும் உள்ளனர்.

கிராம மக்கள் மகிழ்ச்சி

கிராம மக்கள் மகிழ்ச்சி

மேலும், அவருக்கு பாரிவள்ளல், லதா சங்கரி என சகோதர, சகோதரிகள் உள்ளனர். அருணன் குடும்பத்தினர், 15 ஆண்டுகளுக்கு முன்பே சொந்த ஊரை விட்டு வெளியேறிவிட்டாலும், பள்ளி தலைமையாசிரியரின் மகன் என்ற முறையில், விஞ்ஞானி அருணனை கோதைசேரி கிராம மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் வள்ளியூரில், அவரது நண்பர்கள், பிளக்ஸ் போர்டு வைத்து, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

திட்ட இயக்குநராக சாதித்த அருணன்

திட்ட இயக்குநராக சாதித்த அருணன்

மங்கள்யான் திட்டத்தை முழுமையாக உள்வாங்கி, இஸ்ரோவின் பல்வேறு பிரிவு வல்லுநர்களில் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் கலந்து ஆலோசித்துத் திட்டமிட்டு... மொத்த திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளார் சுப்பையா அருணன்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
India's mars bound satellite or Mangalyaan has been made in a record time of 15 months, the fastest ever by the Indian Space Research Organisation (ISRO). Subbiah Arunan, was born in Tirunelveli, and completed his Mechanical engineering. In 1984, he started his career in Vikram Sarabhai Space Centre. He is the project director of Mars Orbiter Mission, informally called Mangalyaan in 2013.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more