For Daily Alerts
Just In
கரூர் கிட்டங்கியில் சிக்கிய பதுக்கல் பணம் - அதிமுக பிரமுகரிடம் விசாரணை
கரூர்: கரூரில் கிட்டங்கி ஒன்றில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் அய்யம்பாளையம் என்ற இடத்தில் தனியார் கிட்டங்கியில் பல கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானிக்கு வந்தது.

இந்த தகவலையடுத்து ராகேஷ் லக்கானி உத்தரவுப்படி கரூர் எஸ்.பி. வந்திதா பாண்டே தலைமையிலான போலீசார் தனியார் கிட்டங்கியில் சோதனை மேற்கொண்டனர். தேர்தல் கணக்கீட்டு பார்வையாளர் ஆஷிஷ் முன்னிலையில் இந்த சோதனை நடந்தது. அப்போது ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, கிட்டங்கி உரிமையாளரான அதிமுக பிரமுகர் அன்புநாதனிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். அன்பு நாதனின் வீட்டிலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.