For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தொடங்கியது தென் மேற்குப் பருவ மழை.. மாநிலமே குளிர்ந்து போனது!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பத்தில் தகித்து வந்த தமிழகம் குளிர்ந்து வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மாலை மற்றும் இரவில் நல்ல மழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய பலத்த மழையால் சென்னை குளிர்ந்து காணப்படுகிறது.

Monsoon rain begins

இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், வேதாரண்யம், தேன்கனிக்கோட்டை, பொன்னேரி, செட்டிக்குளம், வேடச்சந்தூர், பாபநாசம், மன்னார்குடி, மானாமதுரை, தளி, கோத்தகிரி, திருவிடைமருதூர், சாத்தனூர் அணை, மயிலாடுதுறை, லால்குடி, மருங்காபுரி, காரைக்கால், திருத்துறைப்பூண்டி, உதகமண்டலம், கறம்பைக்குடி, புள்ளம்பாடி, தொழுதூர், முஷ்ணம், பேச்சிப்பாறை, அறந்தாங்கி, பெரியாறு, பென்னாகரம், வலங்கைமான், நீடாமங்கலம், கொடைக்கானல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தரங்கம்பாடி உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்குப் பருவ மழை தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை தொடங்கி விட்டதால் இனி வெட்கை தணிந்து குளுமை குடியேறும் என்று மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

English summary
South West Monsoon rain has begun in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X