For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்போதைய மாத பஸ் பாஸில் பயணிக்கலாம்… விரைவில் புதிய விலை அறிவிக்கப்படும் – தமிழக அரசு

தற்போதுள்ள மாத பஸ் பாஸில் பிப்-15ம் தேதி வரை பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: மாத பஸ் பாஸின் புதிய கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பிப்ரவரி 15ம் தேதி வரை பழைய பாஸில் பயணிக்கலாம் என்று கூறியுள்ளது.

தமிழகம்முழுவதும் இன்று முதல் பேருந்துகட்டண உயர்வு அமலாகியுள்ளது. இதன்மூலம் சாதாரண பேருந்துகள், மாநகரபேருந்துகள், விரைவு பேருந்துகள் எனஅனைத்து கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணம், தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ராக்கெட் விலையில் உள்ள தனியார் பேருந்துகட்டணம் தற்போது செயற்கைகோள் அளவிற்குஉயர்ந்து விட்டது.

Montly bus pass rates will be announced soon says TN Govt

இந்த கட்டண உயர்வுக்குப் பின்பும்அண்டை மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாக இருப்பதாகதமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போக்குவரத்துத்தறைஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாத பாஸ் தொடர்பான புதியவிலை விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை பழைய பாஸ்களில்உள்ள கால அவகாசத்தை மக்கள்பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

மேலும்பிப்ரவரி 15ம் தேதி வரைஇந்த பழைய பஸ் பாஸ்கட்டணத்தில் மக்கள் பயணிக்கலாம் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் ரூபாயாகவிற்பனை செய்யப்பட்டு வந்த மாத பாஸைஆயிரத்து 500 வரை உயர்த்த அரசுதிட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்ஒருநாள் பாஸான 50ரூபாய் பாஸும்தற்போது வினியோகிக்கப்படாத நிலையில், புதிய விலை நிர்ணயத்திற்குபின் ஒருநாள் பாஸ் வழங்கப்படும்என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையேசெய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், இனிமேல்பேருந்துக் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டுஉயர்த்தப்படும் என்று கூறியுள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

English summary
Montly bus pass rates will be announced soon says TN Govt. And it has been said that till feb 15 the old montly pass will be accepted for travelling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X