For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காகித ஆலையில் பிடிக்க பிடிக்க சிக்கிய 156 பாம்புகள்

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம் புகளூரில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான காகித தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 156 பாம்புகள் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகளூரில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டிஎன்பிஎல் என்னும் காகித தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாம்புகள் அதிக அளவில் உலாவுதாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் பாம்புகளை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி காஞ்சிபுரத்தை சேர்ந்த இருளர்கள் பாம்பு பிடிக்கும் கூட்டுறவு சங்கத்தை அணுகி உதவி கோரினர்.

More than 150 snakes found in TNPL paper mills, Karur

இதையடுத்து கடந்த மாதம் 25-ந் தேதி அந்த சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 11-பேர் கொண்ட ஒரு குழுவினர் காகித ஆலைக்கு வந்தனர். நேற்று வரை அவர்கள் பாம்பு பிடிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இந்த பாம்புகள் தேடும் பணியின் போது ஏராளமான பாம்புகள் சிக்கின. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என விஷம் உள்ள வகையை சேர்ந்த 33-பாம்புகள் பிடிக்கப்பட்டது. மேலும், பச்சை பாம்பு, குக்ரி பாம்பு, கொம்பேறி மூக்கன் உள்ளிட்ட 123 விஷம் இல்லாத பாம்புகளையும் பிடித்தனர். சுமார் 1 அடி முதல் 10 அடி நீளமுடைய 13 வகையான, 156 பாம்புகள் இவற்றில் அடங்கும்.

அந்த பாம்புகள் அனைத்தும் நேற்று மாலை நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வனத்துறையினர் முன்னிலையில் பாம்புகளின் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவைகள் அனைத்தும் நாமக்கல் வனச்சரகர் கனகரத்தினம் முன்னிலையில் கொல்லிமலை காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

English summary
In a bizarre and horrifying incident, more than 150 snakes were found in TNPL paper mills, Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X