For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபோனுடன் மல்லுக்கு நின்ற நோக்கியா.. கூகுளில் டாப் இடம் பிடித்த ஸ்மார்ட் போன் எது தெரியுமா?

கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    2017ல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த போன் எது தெரியுமா ?- வீடியோ

    சென்னை: கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மக்கள் அதிகமாக விரும்பி எந்த போனை தேடினார்கள் என்பதும், எந்த போனை ஆர்டர் செய்தார்கள் என்பது இந்த பட்டியலில் கருத்தில் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    2016ல் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என்று வெளிவந்த 'பிரீடம் 251' முதல் இடம் பிடித்து இருந்தது. இந்த வருடம் அந்த போன் இல்லாததால் அந்த இடத்தை மற்றொரு போன் ஆக்கிரமித்து இருக்கிறது.

    இந்த வருடம் அதிக பேமஸ் ஆனா ஓப்போ, ஒன் பிளஸ், வீவோ போன்ற போன்கள் முதல் பத்து இடத்திற்குள் வந்தாலும், முதல் ஐந்து இடத்திற்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த பட்டியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போன் இடம்பிடித்து இருக்கிறது.

    5வது இடம் எதற்கு

    5வது இடம் எதற்கு

    'ரேசர் போன்' என்ற ஸ்மார்ட் போன்தான் இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்து இருக்கிறது. கடந்த மாதம் நவம்பர் 15ம் தேதிதான் இந்த போன் சந்தைக்கு வந்தது. இந்த போன் முழுக்க முழுக்க கேம் விளையாடும் பயனாளிகளை குறிவைத்து உருவாக்கப்பட்டது. ஆனாலும் இந்த போன் தினசரி உபயோகிக்க நன்றாக இருப்பதால் பலரும் இதுகுறித்து தேடினார்கள்.

    நோக்கியா 3310

    நோக்கியா 3310

    என்னதான் பல வித்தியாசமான போன்கள் வந்தாலும் நோக்கியா மாதிரி வராது என்று சொல்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே நோக்கியா இந்த தேடலில் உலக அளவில் 4 வது இடம் பிடித்து இருக்கிறது. 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'நோக்கியா 3310 ' இந்த வருடம் மார்ச் மாதத்தில் மீண்டும் சந்தைக்கு வந்தது. இந்த போன் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே பலரும் அதுகுறித்து தேடியுள்ளனர்.

    சாம்சங் கேலக்சி எஸ்8 போன்

    சாம்சங் கேலக்சி எஸ்8 போன்

    ஸ்மார்ட் போன் சந்தையில் இப்போது சாம்சங் நிறுவனம் கில்லியாக இருக்கிறது. தொடர்ச்சியாக சாம்சங் போன்கள் வெடிப்பதாக இந்த வருடம் நிறைய குற்றச்சாட்டுகள் வந்தது. அதன் காரணமாகவே பலரும் சாம்சங் குறித்து தேடினார்கள். இதனால் சாம்சங் கேலக்சி எஸ்8 போன் கூகுள் சர்ச்சில் 3ம் இடம் பிடித்து இருக்கிறது.

    ஐபோன் எக்ஸ் வருகை

    ஐபோன் எக்ஸ் வருகை

    உலகிலேயே தற்போது அதிக விலையுடன் இருக்கும் போன் 'ஆப்பிள் ஐபோன் எக்ஸ்'. கடந்த செப்டம்பர் மாதம் இந்த போன் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே ஜனவரியில் இருந்து இந்த போன் எப்போது வரும் என்று மக்கள் தேடி இருக்கிறார்கள். 999 டாலர் மதிப்புள்ள இந்த போனை வாங்க இப்போதும் பலர் தவமாய் தவமிருந்து கொண்டு இருக்கிறார்கள்.

    ஐபோன் 8 போன்

    ஐபோன் 8 போன்

    ஆப்பிள் குடும்பத்தை சேர்த்த ஐபோன் 8 தான் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட போன்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் இரண்டு ஐபோன் 8 மொபைல்களின் மாடல்கள் வெளியிடப்பட்டது. ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் இரண்டும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இது மொத்தம் மூன்று வண்ணங்களில் வந்தது. கடந்த வருடம் ஆப்பிள் போன் இரண்டாம் இடம் பிடித்தது, இந்த வருடம் கெத்தாக முதல் இடம் பிடித்துள்ளது.

    English summary
    List of most searched smart phone in Google in 2017 has been released. In this list iPhone 8 lists in first. iPhone X, Samsung Galaxy S8, Nokia 3310, Razer Phone in the list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X