For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஹா.. இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகனச்சட்டம்.. தண்டனை, அபராதம் பல மடங்கு ஜாஸ்தி

Google Oneindia Tamil News

சென்னை: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல்(செப்டம்பர் 1) அமலுக்கு வந்ததுள்ளது. இதன்படி போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம், மற்றும் தண்டனை ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு அதிகமாக விதிக்கப்படுகிறது.

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை 93 மாற்றங்களை செய்து மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதில் வாகன ஓட்டிகளுக்கு விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 1 முதல் அதாவது இன்று முதல் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் போலீசார் போக்குவரத்து விதிமீறலுக்கு ஏற்கனவே இருந்ததைவிட பல மடங்கு அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது.

motor vehicle act 2019 impediments from today

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முன்பு 500 ரூபாய் தான் அபராதம் விதிப்பார்கள். ஆனால் இன்று முதல் 5,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

குடித்துவிட்டு ஓட்டினால் 1 முன்பு 2000 ரூபாய் அபராதம் விதிப்பார்கள். இனி குடித்தால் வண்டியை தொட்டாக்கூடால் உங்கள் ஒரு மாத ஊதியத்தையே இழக்க வேண்டியது வரும். ஏனெனில் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பார்கள். மது அருந்திவிட்டு ஹெல்மட் போடாமல் ஓவர் ஸ்பீடில் சென்றால் 15 ஆயிரம் வரை அபராதம் விதிப்பார்கள்.

முன்பு ஹெல்மெட் போடாமல் முன்பு வாகனம் ஓட்டினால் போலீசார் எச்சரித்து விடுவார்கள் அல்லது 100 ரூபாய் அபராதம் விதிப்பது தான் முறையாக இருந்து . ஆனால் இனி ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000 அபராதம் இன்று முதல் விதிக்கப்படுகிறது.

வாகனத்தை இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். சிக்னலை மீறுவது போன்ற வாகனம் ஓட்டும் நபர்கள் செய்யும் சில விதிமீறல்களுக்கு முன்பு 100 ரூபாய். அபராதம் விதிப்பார்கள். ஆனால் இனி அபராதம் 500 ரூபாய் விதிக்கப்பட உள்ளது.

வாகனத்தை விபத்து ஏற்படுத்துவது போல ஓட்டினால் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிக எடை சுமந்து சென்றால் முன்பு வெறும் 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்ப்பட்டது . இனி 2000 ரூபாய் அபராதம். விதிப்பார்கள்.

18 வயதிற்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அதன் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அத்துடன் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான தண்டனையாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறையும் இப்படியே செய்து சிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்களுக்கு முதல் முறை ரூ .1000 வரையிலும், இரண்டாவது முறை என்றால், ரூ .2,000 வரை அபராதம் விதிக்கப்படும். 7. விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் / 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

English summary
motor vehicle act 2019 impediments from today, heavy fines collected from today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X