For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மவுலிவாக்கம் 11மாடி கட்டடங்கள்... ஒன்று தானாக இடிந்தது... மற்றொன்று தரைமட்டமாக்கப்பட்டது...

மவுலிவாக்கம் பகுதியில் கட்டப்பட்டிருந்த இரட்டை 11 மாடிக் கட்டடங்களில் ஒன்று தானாக இடிந்து விழுந்து விட்டது மற்றொன்று வெடிபொருட்களைக் கொண்டு தகர்க்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மவுலிவாக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் இருந்த மக்கள், கட்டிடம் பத்திரமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர். தமிழகத்தில் இதேபோல ஏற்கெனவே சில கட்டிடங்கள் வெடிபொருட்கள் உதவியுடன் தகர்க்கப்பட்டுள்ளன. எனினும் 11 மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் தமிழகத்தில் தகர்க்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால் பலராலும் இந்த சம்பவம் கவனிக்கப்பட்டது.

மவுலிவாக்கத்தில்' பெய்த், பிலீப்' என பெயரிடப் பட்ட, இந்த இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களி லும், சொந்த வீடு வாங்கும் கனவில், நுாற்றுக் கணக்கானோர், வங்கியில் கடன் வாங்கினர்; இன்னும் தவணை கட்டுகின்ற னர். இரண்டு கட்டடமும் இடிந்ததால், அவர்களின் கனவும், மூன்றே வினாடிகளில் தகர்ந்துள்ளது.

Moulivakkam Twin house Faith and Belief demolished story

மதுரையைச் சேர்ந்த பிரைம் சிருஷ்டி நிறுவனம் 'டிரஸ்ட் கெய்ட்ஸ்' என்ற பெயரில் 'பெய்த்' 'பிலீப்' என்று பெயரிட்டு, இந்த அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியது. 2014ல் இடிந்த கட்டடத்தில், 40 வீடுகளும், நேற்று தகர்த்த கட்டடத்தில், 42 வீடுகளும் அமைத்து, விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு வீடும், 800 முதல், 1,500 சதுர அடி அளவுகளில் கட்டப்பட்டவை. சதுர அடிக்கு, 4,500 ரூபாய் விலை வைக்கப்பட்டது. இடிந்து தரைமட்டமான, இரண்டு கட்டடங்களின் விற்பனை மதிப்பு, 40 கோடி ரூபாய்க்கும் அதிகம். இதில் உண்மை என்று பெயரிடப்பட்ட கட்டடம் தானாக இடிந்தது. நம்பிக்கை கட்டடம் வெடி மருந்து வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

2014 ஜூன் 28: போரூர் அருகே மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த இரண்டு 11 மாடி கட்டடங்களில் ஒன்று பெருமழையால் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் தமிழகம், ஆந்திரா, ஒடிசாவை சேர்ந்த 61 கட்டட தொழிலாளிகள் பரிதாபமாக பலியாகினர்.

ஜூன் 29 : தேசிய பேரிடம் மீட்புக் குழுவினர், தீயணைப்பு துறையினர் 27 பேரை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்டனர். முதல்வர் ஜெயலலிதா சம்பவ இடத்தை நேரடியாக பார்வையிட்டு விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தார்.

2014 ஜூலை 3: பணத்தை திருப்பி அளிப்பதாக கட்டட உரிமையாளரான மதுரை பிரைம் சிருஷ்டியின் மனோகரன் வீடு வாங்கியவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார் .

2014 ஜூலை 7: விபத்து பற்றி விசாரிக்க முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடப்பட்டது.

உயிரிழந்த தமிழக தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சமும், வெளி மாநிலத்தவர்க்கு தலா ரூ.2 லட்சமும் வழங்க அரசு உத்தரவிட்டது.

2014 ஜூலை 9: மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பான வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்

2014 ஜூலை 12: சிபிஐ விசாரணை கோரி, திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனுவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது.

2014 ஜூலை 21: கட்டடத்திற்கு பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை மீட்டு தருமாறு அரசிடம் முறையிட்டனர்.

2014 ஆகஸ்டு 25: நீதிபதி ரகுபதி தனி நபர் விசாரணை கமிஷன் முடிந்து 225 பக்கங்கள் கொண்ட அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

2015 ஆகஸ்டு 29: கட்டடம் இடிந்து விழுந்ததற்கு நிறுவனமே காரணம் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இடிந்த கட்டடத்தின் அருகிலுள்ள மற்றொரு கட்டடமும் இடிந்து விழும் ஆபத்து இருப்பதால் அதனை இடிக்க கோரிக்கை எழுந்தது.

ஆபத்தான பி பிளாக் கட்டடத்தையும் இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, இரண்டு அடுக்குமாடிகளையும் கட்டிய கட்டுமான நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்நிலையில் உயர்நீதிமன்றமும் மற்றொரு 11 மாடி கட்டடத்தையும் இடிக்க உத்தரவிட்டது.

2015 அக்டோபர் 19: கட்டடத்தை இடிக்க காஞ்சிபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

2015 நவம்பர் 26: தொழில்நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி ஆட்சியரின் உத்தரவு தடை செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

2016 மார்ச் 18: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து கட்டடம் குறித்து ஆய்வறிக்கை தர உத்தரவிட்டது.

2016 மே 12: கட்டடத்தை ஆய்வு செய்த நால்வர் குழு, தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக கூறி கட்டடத்தை இடிக்க பரிந்துரை செய்தது .

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சிஎம்டிஏ விடம் கட்டடத்தை இடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.

கட்டடத்தைப் பாதுகாப்பான முறையில் வெடிவைத்து தகர்த்தி, இடித்து அப்புறப்படுத்தும் பணியைத் திருப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்திடம் சிஎம்டிஏ ஒப்படைத்தது.

2016 நவம்பர் 2: கடந்த 2 ஆண்டுகளாக அபாகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு, கான்கிரீட் கட்டடமாக காட்சியளித்த 11 மாடி அடுக்குமாடி கட்டடம் 70 கிலோ வெடி பொருட்களைக் கொண்டு 3 விநாடிகளில் தரை மட்டமாக்கப்பட்டது. தரைமட்டமானது நம்பிக்கை கட்டடம் மட்டுமல்ல சொந்த வீடு கனவில் இருந்த பலரது நம்பிக்கையும்தான்.

2016 நவம்பர் 3 : நேற்று வரை கம்பீரமாக அச்சுறுத்தி வந்த 11 மாடி கட்டடம் இருந்த இடத்தில் இன்றைக்கு வெறும் கான்கரீட் குவியல்கள் மட்டுமே காணப்படுகின்றன. எப்போது இடிந்து விழுமோ என்று பல நாள் தூக்கத்தை தொலைத்மி

English summary
On June 28, 2014, 61 people were killed when the 11-storey residential building that was still under construction collapsed following a spell of heavy rain. Project “Trust Heights” with twin residential towers named Faith and Belief, was Prime Sristi Private Limited’s first construction project in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X