அதானி குற்றவாளின்னா "அவரும்"தான்.. என்னை ஜெயில்ல புடிச்சி போடுவீங்களா? செய்ங்க! எம்பி ராசா ஆவேசம்
சென்னை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளிதான். இதை சொன்னதற்காக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் பரவாயில்லை, சிறை செல்ல நான் தயாராக உள்ளேன் என திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
கவுதம் அதானியின் அதானி குழு முறைகேடு தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த நிறுவனம் நிறைய வரி ஏய்ப்பு செய்ததாகவும் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும் அறிக்கை வெளியானது.
இந்த அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அது போல் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் மத்திய அரசு இதை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது காங்கிரஸ் எம்பியாக இருந்த ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில் அதானி நிறுவனத்தில் ரூ 20 ஆயிரம் கோடி முதலீட்டை யார் செய்தது. அந்த நிறுவனத்திற்கு சீன நிறுவனத்துடன் தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் அதானி நிறுவனம் ஈடுபட்டதாகவும் ராகுல் பேசியிருந்தார். மேலும் அதானி விவகாரத்தை பிரதமர் மோடி பேச தயங்குவது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றம் அவ்வப்போது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடர் கூச்சல் குழப்பத்துடன் இருந்தது. இதையடுத்து ராகுல் காந்திக்கு வேறு ஒரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதன் மூலம் அவரது எம்பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.
தகுதி நீக்கத்திற்கு எதிராக ராகுல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ ராசா கட்சி பொதுக் கூட்டத்தில் பேசினார். அவர் கூறுகையில் அதானி விவகாரத்தில் ரூ 10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர்.

பாஜக எம்பிக்கள் 350 பேர் காவி துண்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் 39 பேர் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தோம். அவர்களால் பதில் அளிக்கவே முடியவில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவற்றுக்கு அஞ்சி மம்தா பானர்ஜி, கே சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் யாரும் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை.
ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக் கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். அதானி குற்றவாளி என்றால் பிரதமர் மோடியும் குற்றவாளிதான். இதை சொன்னதற்காக கூட என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை. நான் சிறைக்கு செல்ல தயாராகவே உள்ளேன். இவ்வாறு ஆ. ராசா பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு கட்சித் தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அதானி விவகாரத்தை ராகுல்காந்தி கையிலெடுத்து இன்று எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications