For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"பீப்" பாடல் எல்லாம் வருது... ஆனா எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டைத் தூக்கிட்டாங்களே!

Google Oneindia Tamil News

சென்னை: பீப் பாடலை இன்னும் கூட கேட்க முடிகிறது நெட்டில். ஆனால் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய விஷ்ணு சஹஸ்ரநாமப் பாடலை யூடியூப் பிளாக் செய்துள்ளது இசை ஆர்வலர்களை அதிர வைத்துள்ளது.

காப்பிரைட் பிரச்சினை காரணமாக இந்தப் பாடல் யூடியூபில் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக சரிகம நிறுவனம் தெரிவித்துள்ளது.

MS’ Vishnu Sahasranamam blocked by Youtube

எம்.எஸ். குரலில் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாடல் மிகவும் பிரபலமானது. பலர் தினசரி அதைக் கேட்கத் தவறுவதில்லை. அப்படிப்பட்ட பாடலை திடீரென யூடியூபில் பிளாக் செய்துள்ளதால் அந்தப் பாடலின் ரசிகர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்தப் பாடலை பலரும் தினசரி காலையில் கேட்பது வழக்கம். இந்த சமயத்தில் பிளாக் செய்யப்பட்ட செயல் அவர்களை அதிர வைத்துள்ளது.

பலரும் இந்தப் பாடல் பிளாக் செய்யப்பட்டதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக இசை உலகுக்கு இப்படி நேருவது இது முதல் முறையல்ல. முன்பு 2014ம் ஆண்டும் கூட தியாகராஜரின் பல கீர்த்தனைகள் அடங்கிய வீடியோக்கள் காப்பிரைட் காரணமாக முடக்கப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

பீப் பாடலெல்லாம் நெட்டில் வலம் வரும்போது எம்.எஸ்ஸின் பாடலை முடக்கியது பலரை கவலை கொள்ள வைத்துள்ளது.

English summary
Youtube has blocked the famous Vishnu Sahasranamam sung by MS Subbulakshmi for copyrights issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X