For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுமலையில் தடையை மீறி புகைப்படம்... 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்: வீடியோ

முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் தடையை மீறி புகப்படம் மற்ரும் செல்பி எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ. 4 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

By Suganthi
Google Oneindia Tamil News

ஊட்டி: முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் புகைப்படம் மற்றும் செல்போனில் செல்பி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புகைப்படம் எடுத்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள முதுமலை விலங்குகள் சரணாலயத்தில் புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்கும் போது விலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கும் காரணத்தால் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 In Mudumalai wildlife sanctuary tourist breaking the rules and taking photos and selfies

ஆனால் கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் முதுமலைக்கு வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகள் உற்சாக மிகுதியில் தடையை மீறி விலங்குகளைப் புகைப்படம் எடுக்கின்றனர். அவ்வாறு புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இதுவரை தடையை மீறி புகைப்படம் எடுத்தவர்களிடம் 4 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்கப்படுகிறது என தெரிந்தும் சிலர் அங்கு புகைப்படம் எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை அறியாமல் உள்ளனர்.

English summary
In Mudumalai wildlife sanctuary tourist breaking the rules and taking photos and selfies. But it is banned and forest department collected 4 lakh rupees as fine amount.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X