For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடைந்த முக்கொம்பு அணை.. விவசாயிகள் தர்ணா.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

திருச்சி முக்கொம்பு அணை உடைப்பு காரணமாக, அணை நிர்வாகிகளுக்கு எதிராக விவசாயிகள், முக்கொம்பில் போராடி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    முக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்!- வீடியோ

    திருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைப்பு காரணமாக, அணை நிர்வாகிகளுக்கு எதிராக விவசாயிகள், முக்கொம்பில் போராடி வருகிறார்கள். இவர்கள் தற்போது போலீசால் அகற்றப்பட்டுள்ளனர்.

    காவிரியில் வெள்ளம் காரணமாக நேற்று இரவு முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

    Mukkombu: Famers protesting against officials for broken Upper Anaicut

    இதனால் தற்போது காவிரி நீர் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மொத்தமாக காவிரி நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் நிலை உருவாக்கி இருக்கிறது.

    1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. கடந்த 180 ஆண்டுகளாக இந்த அணைதான் டெல்டா பாசனத்திற்கு உதவியது. இந்த அணை உடைந்த காரணத்தால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதனால் தற்போது முக்கொம்பில் அணைக்கு அருகில் உள்ள உயர் அதிகாரிகள் அறை முன்பாக விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். அணையை சரியாக பராமரிக்காத காரணத்தால்தான் அணை இப்படி உடைந்தது என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

    இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    போராட்டம் குறித்து தெரிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தர்ணா நடத்திய விவசாயிகள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு இருக்கிறார்கள். அங்கு போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர்.

    English summary
    Mukkombu: Famers protesting against officials for broken Upper Anaicut.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X