For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை.. இன்னும் முக்கொம்பு அணை கட்டுமானம் முடியவில்லை.. ஷாக்கிங்!

மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்பட உள்ள நிலையில் இன்னும் முக்கொம்பு அணை கட்டுமானம் முழுதாக முடியவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணைக்கு 2.10 லட்சம் கனஅடி நீர்வரத்து... 1000 கனஅடி நீர் வெளியேற்றம்!

    சென்னை: மேட்டூர் அணை இன்று காலை திறக்கப்பட உள்ள நிலையில் இன்னும் முக்கொம்பு அணை கட்டுமானம் முழுதாக முடியவில்லை.

    காவிரியில் தற்போது பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது.

    காவிரியில் இதேபோல்தான் சென்ற வருடமும் வெள்ளம் ஏற்பட்டது. அப்போதுதான் முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்து கடலில் அடித்து சென்றது.

    58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி! 58 வருடத்தில் இல்லாத அளவிற்கு வெள்ளம்.. ஒகேனக்கல்லில் பெருக்கெடுக்கும் நீர்வரத்து.. வந்தாய் காவிரி!

    என்ன

    என்ன

    முக்கொம்பு அணை 1800 தொடக்கத்தில் ஆரம்பித்து 1836ம் ஆண்டு கட்டப்பட்டது. சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் கட்டிய அணை ஆகும் இது. கல்லணையால் ஈர்க்கப்பட்டு அதன் தொழில்நுட்பத்தைப் பார்த்து அதேபோல் இதன் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.

    பெரியது

    பெரியது

    இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளது. இதன் மேல்பகுதி பாலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலே 6.3 மீட்டர் அகலம் கொண்ட பாலம் உள்ளது. மேட்டூர் , பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை, காவிரி கொள்ளிடம் என்று இரண்டாக பிரித்து அனுப்பும் அணைதான் முக்கொம்பு.

    கொள்ளிடம்

    கொள்ளிடம்

    கொள்ளிடம் ஆற்றில் நீர் சென்று கடலில் தேவையில்லாமல் கலப்பதை தவிர்க்க இந்த அணை கட்டப்பட்டது. சென்ற வருடம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு உள்ள நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் பரிதாபம் ஏற்பட்டது.

    மூட்டை

    மூட்டை

    அப்போது இங்கு மணல் மூட்டைகளை போட்டு அரசு கொஞ்சம் தண்ணீரை சேமித்தது. ஆனால் இப்போது வரை அங்கு முழுமையாக காப்பனைகள் கட்டி முடிக்கப்படவில்லை. உடைந்த மதகுகள் உள்ள இடத்திலும் கூட சிறிய அளவில் கான்கிரீட் தடுப்புகள் போடப்பட்டு இருக்கிறது. காப்பனைகள் போடும் பணி இரவோடு இரவாக நடந்து வருகிறது.

    பக்கம்

    பக்கம்

    அதேபோல் இன்னொரு பக்கம் புதிய மேலணை கட்டும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிய இன்னும் ஒரு வாரம் ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள். காப்பனை 40 கோடி ரூபாயில் கட்டப்பட்டு இருக்கிறது. அதேபோல் 320 கோடி ரூபாயில் மேலணை கட்டும் பணி இரவோடு இரவாக நடந்து வருகிறது.

    அலட்சியம்

    அலட்சியம்

    இன்று மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், அரசு இவ்வளவு அலட்சியமாக செயல்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருவருடம் முழுக்க அமைதியாக வேலை எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்படி கடைசி நேரத்தில் அரசு அவசர அவசரமாக அணை கட்டுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Mukkombu Upper Anaicut construction still going on amidst flood in Cauvery river.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X