For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சச்சின்- லதா மங்கேஷ்கரை வைத்து வலம் வரும் காமெடி வீடியோ.. தடை வருகிறது!

Google Oneindia Tamil News

சென்னை: சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கரின் அனிமேட்டட் படங்களை வைத்து சிறந்த கிரிக்கெட் வீரர் யார் விராத் கோஹ்லியா, சச்சினா என்ற பெயரில் உலா வரும் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் தன்மய் பட்டின் காமெடி வீடியோவுக்குத் தடை விதிக்க மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக கூகுள் மற்றும் யூடியூபை அது அணுகியுள்ளது. இந்த வீடியோவுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதைத் தொடர்ந்து இந்த தடை வருகிறது.

ஆல் இந்தியா பேக்சாட் என்ற காமெடி அமைப்பை நிறுவி நடத்தி வருபவர் தன்மய் பட். இவர் எழுத்தாளர், காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பலமுகம் கொண்டவர்.

இந்த நிலையில் சிறந்த கிரிக்கெட் வீரர் கோஹ்லியா அல்லது சச்சினா என்ற பெயரில் ஒரு காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளார். சச்சின் வெர்சஸ் லதா சிவில் வார் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த வீடியோ காமெடியில் சச்சினும், லதா மங்கேஷ்கரும் பேசிக் கொள்வது போல சித்தரித்துள்ளார்.

இந்த காமெடி வீடியோவில் பேசப்படும் பேச்சுக்கள், லதா, சச்சின், கோஹ்லி என மூன்று பேரையும் கொச்சைப்படுத்துவது போல உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பாஜக மற்றும் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா ஆகியவை இந்த வீடியோவைத் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளன.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது காமெடிதானா அல்லது அவதூறாக உள்ளதா என்பது குறித்து பலவித கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த வீடியோவை தடை செய்ய மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் மற்றும் யூடியூபை அது அணுகியுள்ளதாம்.

English summary
Mumbai cops have decided to ban Tanmay Bhat's controversial comedy video on Sachin and Mangeshkar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X