For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகம் எதிரே பணி வழங்க கோரி துப்புரவு ஊழியர் தீக்குளிப்பு

மீண்டும் பணி வழங்க கோரி துப்புரவு பணியாளர் தீக்குளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

வேலூர்: தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என கோரி ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு பணியாளர் தீக்குளித்தார். இதனால் பலத்த தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை நகராட்சி துப்புரவு ஊழியராக பணி புரிந்து வந்தவர் ஆனந்தன். இவருக்கும், துப்புரவு ஆய்வாளர் முருகன் என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், ஆனந்தன் தன்னை தாக்கியதாக, நகராட்சி ஆணையாளரிடம் முருகன் புகார் அளித்திருந்தார்.

Municipal sanitation worker fire in Vellore

அதன்பேரில், ஆனந்தன் கடந்த மாதம் 4ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் ஒருமாதமாகியும் தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாததால் மிகுந்த வேதனை அடைந்தார்.

எனவே பணியில் மீண்டும் நகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, முருகன் ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே தீக்குளித்தார். இதில் 90 சதவீதம் தீக்காயமடைந்த ஆனந்தன் உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Municipal sanitation Worker Anandan was dismissed on the 4th of last month due to a complaint. But one month later, Murugan was suffering from not taking him back into work. So. Murugan fire before the MLA's office. Anandan was immediately admitted to the Vellore State Medical College hospital with 90 per cent burnout.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X