For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாயத்து தலைவர் கொலைக்கு பழிக்குப் பழி... ஜாமீனில் வந்தவர் வெட்டிப் படுகொலை

Google Oneindia Tamil News

நெல்லை: சென்னையில் பஞ்சாயத்து தலைவர் படுகொலைக்கு பழிக்குப் பழி தீர்க்கும் விதமாக ஜாமீனில் வெளியில் வந்த குற்றவாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த லாரி டிரைவர் ராமசந்திரன். சென்னை திருச்சூரில் வசித்து வந்த இவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்குத் தொடர்பாக போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளி வந்தார்.

Murder near Sankarankovil

சென்னையில் இருந்தால் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என கருதிய ராமசந்திரன் ஒரு மாத்ததிற்கு முன்பு சங்கரன்கோவில் அருகே கண்டிகேபேரிக்கு வந்து நண்பரின் மகன் வேல்முருகன் என்பவரது வீட்டில் தங்கினார்.

இந்நிலையில் அதிகாலை ராமசந்திரன் சங்கரன்கோவில் சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஆனைமலை விலக்கில் வந்த போது திடீரென வேகமாக வந்த கார் பைக்கை இடித்து தள்ளியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராமசந்திரனை காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் வெட்ட முயன்றது.

சுதாரித்த எழுந்த ராமசந்திரன் அங்குள்ள தோப்புக்குள் தப்பி ஓடினார். ஆனால் அவரை துரத்தி சென்று சராமரியாக வெட்டினர். இதில் அவரது மண்டை இரண்டாக பிளந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கரஸ்வரன், டவுன் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் உள்ளிட்ட்ர் விரைந்து சென்று ராமசநதிரன் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவரின் சொந்த ஊர் சங்கரன்கோவில் அருகே உளள அச்சம்பட்டி.இதனால் அவரது கொலைக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இது தொடர்பாக கொலையாளிகள் வந்த காரின் டிரைரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் சங்கரன்கோவில் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

English summary
Near Sankarankovil, a man was murdered by the group of mobs for revenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X