For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து.. போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் பரபர பேட்டி!

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆபத்து என போலீஸ் கெடுபிடியை மீறி முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை கல்லூரியில் பேராசிரியராக இருந்த நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார். அவர்கள் மறுப்பு தெரிவித்ததுடன் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

Murugan says he has life threat

இந்த நிலையில் சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். அதில் மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், கல்லூரி மாணவிகளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா என கேட்டதாக நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில் இதை பேராசிரியர் முருகன் மறுத்துள்ளார். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக்கூடாது. ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பசாமி, முருகன் தரப்பில் வழக்கை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என மனு செய்யப்பட்டது.

2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ! 2 வயது சிறுமி.. தலையில்லாமல் முண்டமாக நடந்து வந்த அந்த நேரம்.. வைரலான வீடியோ!

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி லியாகத் அலி முன்பு இன்றும் நடைபெற்றது.
இதற்காக அவர்கள் மூவரும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது முருகன் கூறுகையில் நிர்மலா தேவியிடம் மரண பயத்தை காட்டி மிரட்டி சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களது பாதுகாப்பை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். என்னை வெளியில் விட்டால் பல்வேறு தகவல்களை கூறிவிடுவேன் என்பதால் எனக்கு ஜாமீன் தர மறுக்கின்றனர் என்றார்.

English summary
Professor Murugan says that there is life threat for him and his family. Court has to ensure the protection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X