For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரத்தில் 50 பேருக்கு தொடர்பு.. முருகன் ஏற்படுத்தும் பரபரப்பு

Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்: நிர்மலா தேவி விவகாரத்தில் 50 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி பேராசிரியர் முருகன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முருகன், கருப்பசாமி குறித்து இவர் வெளியிட்ட வாக்குமூலங்கள் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் நிர்மலாதேவியின் வாக்குமூலம் பொய்யானது என முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அது போல் கருப்பசாமியும் மறுத்துள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி உள்ளிட்டோரை ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது போலீஸ் வேனில் இருந்து இறங்கிய முருகன், இது ஒரு காட்டுத்தனமான குற்றச்சாட்டு.

கவனம்

கவனம்

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இன்னு்ம 50 பேருக்கும் மேல் உள்ளார்கள். அந்த பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவேன் என கூறிவிட்டு சென்றார். இதையடுத்து வரும் போது அவர் நிச்சயம் ஏதாவது புதிய தகவலை கூறுவார் என்பதால் செய்தியாளர்களின் கவனம் முழுவதும் முருகன் மீதே இருந்தது.

அங்கும் இங்கும்

அங்கும் இங்கும்

விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தார். அப்போது வாடிய முகத்துடன் வந்தார். எது குறித்தும் அவர் கூறவில்லை. போகும் போது ஆக்ரோஷமாக பேசினீர், வரும் போது அமைதியாக இருக்கிறீர்களே. இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என கேட்டபடி செய்தியாளர்களை அங்கும் இங்கும் ஓடி ஓடி கேட்டனர்.

10 பேரை தாண்டியது

10 பேரை தாண்டியது

ஆனால் முருகனோ எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வேன் என்றார். இந்நிலையில் திடீரென நிர்மலா தேவியின் வாக்குமூலங்கள் அனைத்தும் பொய் என தெரிவித்தார். இவர் இப்படி இருக்க நிர்மலா தேவியோ செய்தியாளர்கள் பக்கம் கூட திரும்பி பார்க்க விடப்படவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்தபோதே அந்த பட்டியல் 10 பேரை தாண்டியது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தற்போது முருகனும் 50 பேருக்கும் மேல் ஆதாரம் இருக்கிறது என்று கூறுவதால் அடுத்த முறை கோர்ட்டுக்கு வரும் போது அந்த பட்டியலை அவர் வெளியிடுவாரா அல்லது அவரது வழக்கறிஞர் மூலம் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Professor Murugan says that there is a connection for more than 50 members in this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X