For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியா விவகாரம்: சென்னையில் ரஷ்ய தூதரகத்தை மீண்டும் முற்றுகையிட்ட முஸ்லிம் அமைப்புகள்

சிரியாவுக்கு ஆயுதம் வழங்கும் ரஷ்யாவின் செயலை கண்டித்து சென்னை ரஷ்ய தூதரகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சிரியா போர் விவகாரம்... சென்னையில் ரஷ்ய தூதரகம் முற்றுகை- வீடியோ

    சென்னை: ரஷ்யா சிரியாவுக்கு ஆயுதம் வழங்குவதால் அங்கு கொத்து கொத்தாக குழந்தைகள் , பெரியவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சென்னை ரஷ்ய தூதரகத்தை முற்றுகையிட முயற்சித்தன.

    சிரியாவில் தீவிரவாதிகள், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள இடங்களை கைப்பற்றும் விதமாக அந்த நாட்டு அரசு உள்நாட்டு போர் நடத்தி வருகிறது. சிரியாவிற்கு ரஷ்யா ஆயுதங்களை விநியோகம் செய்து வருகிறது.

    Muslim protest against Russia in Chennai

    இதனால் 700 பேர் பலியாகினர். மேலும் அந்த அரசு நடத்திய கல்நெஞ்சத் தாக்குதலால் சிரியாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பலியாகிவிட்டனர். 5 மணி நேரம் போர் அறிவிப்பு செய்ய ஐ.நா. அறிவுறுத்தியும் அது நடைமுறைப்படுத்தவில்லை.

    இதனால் பிஞ்சு குழந்தைகளை கொன்று குவிக்கும் சிரியாவுக்கு ரஷ்யா ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தை முஸ்லிம் அமைப்புகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் பஷர் அல் ஆசாத் கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வருகிறார் என குற்றம்சாட்டினர். இந்நிலையில் இன்று முஸ்லிம் அமைப்புகள் ரஷ்ய துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர்.

    இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தின் ஐ.நா.வின் அமைதிப்படை தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    English summary
    Muslim organisations protest against Russia to supply weapons for Syria in Chennai Santhome.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X