For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரே 'நாடக'க் கம்பெனியால் மிகக் குறுகிய காலத்தில் 2 முறை ஏமாற்றப்பட்ட மக்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக முன்கூட்டியே சொல்லாமலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார் முத்துகருப்பன்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எம்.பி. பதவியை ராஜினாமா செய்த முத்துக்கருப்பன்

    டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மிகக் குறுகிய காலத்தில் 2 உலக மகா பல்டிகளைப் பார்த்து மக்கள் வெறுத்துப் போயுள்ளனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு திட்டத்தை அமைக்க 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று கூறியும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

    இதனால் கடந்த 19 நாட்களாக நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் முடக்கினர். எனினும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன.

    நவநீதகிருஷ்ணன் டிராமா

    நவநீதகிருஷ்ணன் டிராமா

    மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைய சில நாட்களுக்கு முன்னர் மாநிலங்களவையில் உணர்ச்சிவசப்பட்டு பொங்கினார் நவநீதகிருஷ்ணன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நாங்கள் தற்கொலை செய்வோம் என்று மிரட்டினார். ஆனால் இதற்கு அவர் கட்சி எம்பிக்களே ஜகா வாங்கினர்.

    முத்துக்கருப்பன் டிராமா

    முத்துக்கருப்பன் டிராமா

    இந்த நிலையில் மத்திய அரசுக்கு விதித்த கெடு முடிவடைந்த நிலையில் காவிரி நீர் கிடைக்காத நிலையில் பதவி ஒரு கேடா என்று ஆவேசமடைந்த அதிமுக எம்பி முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யபோவதாக அறிவித்தார். அதன்படி இன்று ராஜினாமா கடிதத்தை வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

    ஏமாந்துட்டாங்களே மக்கள்

    ஏமாந்துட்டாங்களே மக்கள்

    ஸ்கீம் என்றால் அது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதால் முத்துகருப்பனை போல் மற்ற எம்பிக்களும் ராஜினாமா செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. முத்துக்கருப்பனும் ஹீரோ ஆனார்.

    2 பல்டிகள்

    2 பல்டிகள்

    ஆனால் வெங்கையா நாயுடு இவரது ராஜினாமா கடிதத்தில் பிழை உள்ளது என்று கூறி நிராகரித்து விட்டார். ஆனால் மறுபடியும் ராஜினாமா செய்வேன் என்று கூறாமல், இனிமேல் செய்ய மாட்டேன் என்று கூறி எஸ்கேப் ஆகி விட்டார் முத்துக்கருப்பன்.. அதாவது மிகக் குறுகிய காலத்தில் ஒரே நாடகக் கம்பெனியால் 2 முறை ஏமாற்றப்பட்டுள்ளனர் மக்கள்.

    English summary
    Despite Muthukaruppan has not committed ever before about resignation for Cauvery, he did it. But Navaneethakrishnan failed to fulfil his promise given in the parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X