For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை நெல்லை மாவட்ட நிர்வாகம் 15 நாட்களுக்குள் நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவ

By Vazhmuni
Google Oneindia Tamil News

நெல்லை: பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் 15 நாட்களுக்குள் நீக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வியனரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க அனுமதித்து பெப்சி, கோக் உள்ளிட்ட நிறுவனங்களின் கைகூலியாக நெல்லை மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. 25 லட்சம் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, 86, 107 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய தண்ணீர் இல்லை.

Naam Tamilar Party announces protest against district administration

இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்காமல் பெப்சி,கோக் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவரை மாற்ற வேண்டும்.

பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வியனரசு கூறினார்.

English summary
Naam Tamilar Party state coordinator vinyarasu announces protest against district administration allowing pepsi, coke companies to draw water from Thamirabarani river
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X