For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுகவினருடன் மோதல்.. சீமான் உள்ளிட்ட 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி, குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 7 பேர் இன்று வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்கள்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த மே மாதம் மதிமுக தலைவர் வைகோவை வரவேற்க மதிமுகவினரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வரவேற்க நாம் தமிழர் கட்சியினரும் திரண்டிருந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் - மதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் உள்ளிட்டோர் ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் பெற்றுள்ளார்கள்.

Naam Thamizhar party Seemaan appeared in Trichy court

இந்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு, தஞ்சாவூர் கரிகாலன், குமார், கந்தசாமி, துரைமுருகன், இனியன் பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் ஜாமின் மற்றும் பிணைத்தொகை செலுத்துவதற்கு இன்று திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐயப்பன் முன்பு நேரில் ஆஜரானார்கள்.இவர்களின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் நெல்லை சிவா, திருச்சி மாரிமுத்து, ராஜராஜன், உள்ளிட்டோர் வழக்கறிஞர்களாக ஆஜரானார்கள்.

English summary
Naam Thamizhar Party’s chief organizer Seeman and his party workers Prabu, Karikalan, Kandasamy, Kumar, Duraimurugan, Iniyan Prakash appeared in Trichy JM5 court. Already they got anticipatory bail in Madurai bench of Madras High court. Today they appeared and paid bail amount and get bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X