For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாம் தமிழர் கட்சி பற்றிய விமர்சனங்களுக்கு, அக்கட்சி அளித்த பதில்கள்!

By Super
Google Oneindia Tamil News

சென்னை: நாம் தமிழர் கட்சி குறித்தான விமர்சனங்களுக்கு அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரின் பதில்கள்:

1) நாம் தமிழர் கட்சி மாற்று மொழியாளர்களை எதிர்க்கிறது, ‘தமிழர்', ‘தமிழரல்லாதார்' என மக்களைப் பிரித்துப் பார்க்கிறது, மாற்று மொழியாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று கருதுகிறது!!

Naamtamilar party explain it's political stand and gives answers to the criticism

a. முற்றிலும் தவறு. மாற்று மொழியாளர்களை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களாகவே அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி என்பது அனைத்து மக்களுக்குமானது மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானது. தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று இணக்கமாக வாழவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி நம்புகிறது.

தமிழ் நாட்டை ஆளும் அதிகாரம் தமிழனுக்கு இருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி நம்புகிறது. மொழி வழி மாநிலங்கள் பிரித்ததின் அடிப்படைத் தத்துவமே, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தனது அதிகாரத்தைப் பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான். அவ்வாறு தான் மற்ற மாநிலங்களின் நிலையும் உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டின் தலைமை மட்டுமே கடந்த 50 ஆண்டுகளாக தமிழரல்லாதாரிடம் இருக்கிறது. அதன் விளைவு தான் இன்று தமிழ் இனம் தன் உரிமைகளை இழந்து, தாழ்ந்து வீழ்ந்து கிடக்கிறது. தமிழகத்தை ஆளும் தலைமை யார் என்பதைத் தவிர வேறு எந்த இடத்திலும் "யார் தமிழர்" என்ற கேள்வியை நாம் தமிழர் கட்சி எழுப்புவதில்லை.

2) சாதியின் அடிப்படியில் தான் தமிழர் யார் என்று நாம் தமிழர் கட்சி அடையாளம் காண்கிறது.

a. இல்லை. நாம் தமிழர் கட்சி சாதியின் அடிப்படியில் இன அடையாளம் காண்பதில்லை. "தமிழை தாய் மொழியாகவும், வாழ்வியல் மொழியாகவும் கொண்டு தன்னைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ளும் எவரையும் நாம் தமிழர் கட்சி தமிழராகத்தான் அடையாளம் காண்கிறது". திராவிடக் கட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ள யாருக்கும் இது பொருந்துமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும், சாதிப் பற்றை விடுத்தால் தான் தமிழராக ஒன்றிணைய முடியும் என்றும் நாம் தமிழர் கட்சி தீர்மானமாக நம்புகிறது. இது வரை, ஆரிய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி அரசியல் செய்த திராவிட கட்சிகள் தான் சாதி அடிப்படியில் இன வேற்றிமை பார்த்துள்ளன.

3) திராவிடக் கருத்தியலை எதிர்ப்பதன் மூலம் நாம் தமிழர் கட்சி தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிற்கிறது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. "சாதிப் பெயரைப் போடுவதை தமிழன்
விட்டதால் தான் தமிழன் உரிமைகளை இழக்க நேரிட்டது" என்று சீமான் பேசியுள்ளார்.

a. தவறு. இது வரை திராவிடக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களைப் கணிசமான அளவில் பொதுத் தொகுதிகளில் நிறுத்தியதில்லை (ஒருதொலைக்காட்சி விவாத்தில் திமுக உறுப்பினர் அப்பாவு, "ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தவருக்கு பொதுத் தொகுதியில் வாய்ப்பளிக்கப்படுவதில்லை?" என்னும் கேள்விக்கு, "அவர்களுக்கென்று தான் தனித் தொகுதி உள்ளதே?" என்று பதிலளிக்கிறார்.

இந்த மண்ணின் பெருமைக்குரிய ஆதித்தமிழரை தனி தொகுதியில் மட்டும் சென்று போட்டியிட சொல்லி ஒதுக்குவது இந்த திராவிடக் கட்சிகள் தானே? நாம் தமிழர் கட்சி ஒடுக்கப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை இந்த மண்ணின் பெருமைக்குரிய ஆதித் தமிழராகப் பார்க்கிறது. அதனால் தான் "தலித்" என்னும் சொல்லாடலைத் தவிர்த்து, "ஆதித்தமிழர்" என்கிற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது.

நாம் தமிழர் கட்சி ஆதித்தமிழருக்கு முன்னுரிமை அளிப்பதை, "ஒரு தாய் நலிவடைந்த குழந்தைக்கு அதிக அக்கறை காட்டுதலை அந்த குழந்தையின் சகோதர, சகோதரிகள் திறந்த மனதோடு ஏற்பதைப் போல" மற்ற தமிழ் இனக்குழுக்கள், பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி எதிர்ப்பார்க்கிறது. இதே நிலைப்பாட்டில் இட ஒதுக்கீட்டையும் நாம் தமிழர் கட்சி ஏற்கிறது.

"நான் நிறுத்தும் வேட்பாளரை தாழ்த்தப்பட்டவராய் பார்ப்பதென்றால், தயவு செய்து வாக்களிக்க வேண்டாம். அவரைப் பெருமைக்குரிய தமிழ் தேசிய இனத்தின் பிள்ளையாகக் கருதினால் மட்டுமே வாக்களியுங்கள்" என்று தான் அண்ணன் சீமான் பேசி வருகிறார். சாதி அடிப்படையில் மட்டுமல்ல, வர்க்க ஏற்றத்தாழ்வு அடிப்படியிலும், பாலின வேறுபாடு அடிப்படையிலும் நிகழ்த்தப்படும் ஒடுக்குதலையும் நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது. அதன் அடிப்படியிலேயே, இந்த சமூகத்தின் பல்வேறு தளங்களிள் ஏற்றம் பெற வேண்டியவர்களான ஆதித்தமிழர், பெண்கள், திருநங்கையர், ஏழை எளியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நாம் தமிழர் வேட்பாளர் பட்டியலில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடக் கட்சிகள் உதவி வழங்குதல் என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து வேட்டி சேலை வழங்க்கின. ஆனால், அவர்கள் தூரத்தில் இருந்து பார்க்கக் கூத் தயங்க்கும் குப்பம்/சேரிப் பகுதிகளுக்கு சேற்றின் நடுவே நடந்து தானே முன்னின்று குப்பையை அகற்றி, "என் மக்களோடு நான் இருப்பேன்" என்று நின்றவர் சீமான் மட்டுமே.

மதுரவாயில் அருகில் உள்ள சேரிப் பகுதியில் உள்ள கழிப்பித்தை அதிகாரிகள் அகற்ற முயன்ற போது (அதன் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து குப்பையை கொட்ட அந்த இடம் தேவைப்பட்டதாம்) அந்த மக்களோடு ஒரு நாள் முழுக்க நின்று போராடி அவர்களுக்கு கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்தவர் சீமான். சென்னையில் வேறு பகுதியில் இருந்த பொதுக் கழிப்பிடம் நுழையக் கூட முடியாதவாறு, மலமும் சகதியுமாக இருந்த போது சீமானின் அறிவுரைப்படி அந்தக் கழிப்பித்தை நாம் தமிழர் கட்சியினரே சுத்தம் செய்து
கொடுத்தனர்.

பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய திராவிடக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் (பெரியாரைத் தவிர்த்து) சாதி ஒழிய வேண்டும் என்னும் நோக்கம் இருக்கவில்லை. பலருக்கு சுயநல நோக்கங்கள் இருந்தன. சமூதாய ஏணிப்படியில் அப்போது முதல் நிலையில் இருந்த பார்ப்பனர்களை விரட்டி விட்டு அந்த முதல் நிலைக்குத் தாங்கள் செல்ல வேண்டும் என்னும் நோக்கம் இருந்ததே தவிர சாதிக் கட்டமைப்பை ஒழிக்க வேண்டும் என்னும் நோக்கமும், சமுக நீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டவேண்டும் என்னும் எண்ணமும் இருக்கவில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

English summary
Naamtamilar party explain it's political stand and gives answers to the criticism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X