For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர் சங்கத் தேர்தல்: 240 நடிகர்களுக்கு ஓட்டுப்போடும் உரிமை மறுக்கப்பட்டதா?

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை சச்சு உள்பட மொத்தம் 240 பேருக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நடிகர் சங்கத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி மொத்தம் 2435 வாக்குகள் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பதிவாகி இருக்கிறது என்று தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்து இருக்கிறார்.

Nadigar Sangam Elections: 240 Actors Lost Voting Rights

மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் என்றும் இரவு 9 மணிக்குள் முடிவு தெரிந்து விடும் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகர்கள் பலரும் ஓட்டுப் போட முடியாமல் திரும்பி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதுகுறித்து விசாரிக்கையில், சங்கத்தின் திட்டங்கள், கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் அவர்கள் ஓட்டுப்போடும் தகுதியை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இவ்வாறு 240 நடிக, நடிகையருக்கு ஓட்டுப்போடும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அவர்கள் சங்கத்தில் உறுப்பினர் பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 783 தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 43 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதில் முக்கியமாக நடிகர் சங்க உறுப்பினருக்கான புதுப்பித்தலை செய்யாதவர்கள் முதற்கட்டமாக நிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மன்சூர் அலிகான் மற்றும் சச்சு ஆகியோர் சற்றே சோகத்துடன் தங்கள் வருத்தங்களை ஊடகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஒருபக்கம் நடிகர்களுக்கு ஓட்டுரிமை மறுக்கப்பட்டது என்றால் மற்றொருபுறம் நடிகர் மோகனின் ஓட்டை யாரோ ஒருவர் மாற்றிப் பதிவு செய்ததாக பரபரப்புக் கிளம்பியிருக்கிறது.

English summary
Nadigar Sangam Elections: Sources Said " More Than 240 Actors lost there Voting Rights in Nadigar Sangam Elections".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X