For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை... கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் உள்பட 5 பேரை கோர்ட் விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

By Kmk Esakkirajan
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: பாலியல் பலாத்கார வழக்கில் இருந்து குமரி பாதிரியார் உள்பட 5 பேரை கோர்ட் விடுவித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குமரி மாவட்டம் மார்தாண்டம் பஸ் நிலையம் அருகே கரிஸ்மேட்டிங் என்ற கிறிஸ்தவ ஜெப கூடம் இயங்கி வருகிறது. இதை பாதிரியார் ஜான்ஜோசப் என்பவர் நடத்தி வந்தார்.

nagercoil church father released in rape case

ஜெபக்கூடத்தில் கடந்த 1997ம் ஆண்டு ஜான்ஜோசப் பெண் ஊழியர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாகவும், ஆண் ஊழியர்களை கட்டாயப்படுத்தி பெண் ஊழியர்களுடன் உறவு கொள்ள வைத்தாகவும், அங்கு பணிபுரிந்த கில்பர்ட் ராஜ் என்பவரை கொலை செய்து புதைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக மார்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி பாதிரியர் மற்றும் ஆண் ஊழியர்கள் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் கொல்லப்பட்ட கில்பர்ட் ராஜ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

இதில் எலும்பு கூடுகள் மட்டுமே கிடைத்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் அதிரடியாக மாலை நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார். வழக்கில் தொடர்புடைய ஜான் ஜோசப் மற்றும் 5 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த 5 பேரில் இரண்டு பேர் ஏற்கனவே இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Nagercoil church father released in rape case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X