For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரிட்ஜோ கொலையை கண்டித்து நாகர்கோவிலில் சாலைமறியல்.. முடங்கியது போக்குவரத்து

மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: மீனவர் பிரிட்ஜோ படுகொலையை கண்டித்து நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

தங்கச்சிமடத்தை சேர்ந்த தமிழக மீனவர் பிரிட்ஜோ சிங்கள கடற்படையால் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை எற்படுத்தியது.

Nagercoil fishermen road blockade near collector office for condemning pritjo's death

சிங்கள கடற்படையின் அட்டூழியத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தங்கச்சிமடத்தில் அவரது உடலை வாங்க மறுத்து 7 வது நாளா போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மீனவர் பிரிட்ஜோ படுகொலையைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் 3000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஸ்தம்பித்துள்ளது.

English summary
Nagercoil fishermen condemns for fishermen pritjo's death. They are doing road blockade near collector office. over 3000 women have participated in the protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X