For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பழம்பெரும் பாடகர் ஈ.எம். ஹனிபா உடல் நாகூரில் நல்லடக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகூர்: மறைந்த பழம்பெரும் பாடகர் ஈ.எம்.ஹனிபாவின் உடல் இன்று மாலை நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திமுகவின் பிரசார பாடகரும், திரைப்படப் பாடகருமான நாகூர் ஈ.எம். ஹனிஃபா (90) சென்னை கோட்டூர்புரத்தில் புதன்கிழமை இரவு 8 மணிக்கு காலமானார்.

Nagore Hanifa's funerals held

அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான நாகூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், இன்று மாலை இறுதி ஊர்வலம் நடைபெற்றது. நாகூர் தர்காவில் இறுதிச்சடங்கு நடைபெற்ற பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

English summary
The funeral of Nagore Hanifa was held in Nagore this evening
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X